RRB JE Recruitment 2024 | BE & B.Tech முடித்தவர்களுகுக் ரயில்வேயில் காத்திருக்கும் 7,951 வேலையாப்பு!

RRB ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆட்சேர்ப்பு தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது.
 

All you know about RRB JE Recruitment 2024, 7951 Vacancy, Apply Online, Eligibility, Fee dee

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board - RRB) ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பிற பணிகளுக்கான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்து.

RRB JE ஆட்சேர்ப்பு 2024

RRB அறிவிப்பின்படி, RRB கோரக்பூருக்கு மட்டும் Junior Engineer, Depot Material Superintendent, and Chemical & Metallurgical Assistant including 17 Research/Chemical Supervisor/ Research and Metallurgical Supervisors ஆகிய 7934 பணியிடங்களை நிரப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது

விண்ணப்பிக்க காலக்கெடு

விண்ணப்பதாரர்கள் பல்வேறு RRB பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 30 ஜூலை 2024 முதல் 29 ஆகஸ்ட் 2024 வரை சமர்ப்பிக்கலாம். இரண்டு-நிலை CBT தேர்வு செயல்திறன், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதிய அளவு

JE, Chemical & Metallurgical Assistant, or Depot Material Superintendent விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தேர்வின் போது 6 ஆம் நிலை (₹35,400) ஊதியத்தைப் பெறுவார்கள்.

RRB கோரக்பூரில் Research & Metallurgical Supervisor/Research/ Chemical Supervisor பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தேர்வின் போது 7 ஆம் நிலை (₹44,900) ஊதியத்தைப் பெறுவார்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1 ஜனவரி 2025ம் தேதியின்படி 18 முதல் 36 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் JE க்கு சம்பந்தப்பட்ட கிளையில் B.E/ B.Tech/ மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

RRB JE விண்ணப்பக் கட்டணம் 2024

பொது மற்றும் OBC பிரிவினருக்கு: ரூ.500
SC/ST பிரிவினருக்கு: ரூ.250

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrailways.gov.in ஐப் பார்வையிடவும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள சமீபத்திய அறிவிப்புகள் இணைப்பைக் கிளிக் செய்யவும். ரயில் டிக்கெட் பரிசோதகர் ஆட்சேர்ப்பு பிரிவில், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை நீங்கள் காணலாம். அதை கிளிக் செய்யவும்.

நீங்கள் இங்கே அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்து விவரங்களை படித்து பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrailways.gov.in ஐப் பார்வையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios