மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் அறிவித்துள்ள 7500 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு தயாரிக்க அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

சேலம்‌ மாவட்டத்தில்‌ எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 4ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌ தொடங்க உள்ளன.

சேலம் மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் 7,500 க்கும்‌ மேற்பட்ட குரூப்‌ பி, குரூப்‌ சி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. ssc.nic.in என்ற இணையதளம்‌ மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும்‌, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மே 4ஆம் தேதி (நாளை) முதல் சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌ தொடங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள்‌ தொடர்பாக விவரம் அறிய 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பேசலாம். சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த இளைஞர்கள்‌ இந்த வாய்ப்பை அதிக அளவில்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

NEET UG 2023: நெருங்கும் நீட் தேர்வு... அட்மிட் கார்டு வெளியீடு எப்போது?

7500 பேருக்கு மேல் தேர்வு செய்யப்பட இருக்கும் இந்த வேலைவாயப்புக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்‌. முன்னாள்‌ ராணுவத்தினர்‌, மாற்றுதிறனாளிகளுக்கும் வயது வரம்பில்‌ சலுகை உண்டு.

இந்தத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌, மாற்றுத்திறனாளிகள் கட்டணம்‌ செலுத்தாமலே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மாதம் 43 ஆயிரம் சம்பளம்.. ஆவினில் வேலைவாய்ப்பு - முழு விபரம்