தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் 2,257 பணியிடங்களுக்கு, உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகிறது. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது, உதவியாளர், இளநிலை உதவியாளர் என 2,257 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

இதையும் படிங்க: சென்னை NIRT-ல் வேலை.. 10 படித்தால் போதுமாம் ...கைநிறைய சம்பளம் வாங்கலாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!!

பிற விவரங்கள்:

கல்வி தகுதி: இந்த பணிக்கான கல்வி தகுதியானது, இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது: இந்த பணிக்கான வயது வரம்பானது, 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். மேலும் எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம்: இந்த பணிக்கான மாத சம்பளம், கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிக்கு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு, https://www.drbkrishnagiri.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2023

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D