Asianet News TamilAsianet News Tamil

புதிய யெஸ்டி மாடல்கள் வினியோகம் துவக்கம்

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் புதிய யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வினியோக பணிகளை துவங்கியது.

Yezdi Adventure, Scrambler and Roadster deliveries commence in India
Author
Tamil Nadu, First Published Jan 24, 2022, 12:29 PM IST

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்களின் வினியோகத்தை துவங்கி உள்ளது. யெஸ்டி அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் என மூன்று மாடல்களின் வினியோகமும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல்கள் ஜனவரி 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய யெஸ்டி சீரிஸ் விலை விவரங்கள் 

யெஸ்டி அட்வென்ச்சர் ஸ்லிக் சில்வர் ரூ. 2,09,900
யெஸ்டி அட்வென்ச்சர் மேம்போ பிளாக் ரூ. 2,11,900
யெஸ்டி அட்வென்ச்சர் ரேன்ஜர் கேமோ ரூ. 2,18,900

Yezdi Adventure, Scrambler and Roadster deliveries commence in India

யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் ஃபயர் ஆரஞ்சு ரூ. 2,04,900
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் எல்லிங் எல்லோ ரூ. 2,06,900
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் அவுட்லா ஆலிவ் ரூ. 2,06,900
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் ரிபெல் ரெட் ரூ. 2,10,900
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மீன் கிரீன் ரூ. 2,10,900
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மிட்நைட் புளூ ரூ. 2,10,900

யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் ஸ்மோக் கிரே ரூ. 1,98,142
யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் ஸ்டீல் புளூ ரூ. 2,02,142
யெஸ்டி ரோட்ஸ்டர் டார்க் ஹண்டர் கிரீன் ரூ. 2,02,142
யெஸ்டி ரோட்ஸ்டர் குரோம் கல்லண்ட் கிரே ரூ. 2,06,142
யெஸ்டி ரோட்ஸ்டர் சின் சில்வர் ரூ. 2,06,142

Yezdi Adventure, Scrambler and Roadster deliveries commence in India

மூன்று புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அட்வென்ச்சர் மாடலில் 29.8 பி.ஹெச்.பி. திறன், 29.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், ஸ்கிராம்ப்ளர் மாடலில் 28.7 பி.ஹெச்.பி. திறன், 28.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், ரோட்ஸ்டர் மாடலில் 28.3 பி.ஹெச்.பி. திறன், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இந்தி சந்தையில் புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், மீடியோர் 350, கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வாட்பிலைன் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios