வங்கிக் கணக்கில் மாயமாகும் ரூ.295: என்ன காரணம்?
உங்கள் வங்கிக் கணக்கில் அவ்வப்போது ரூ.295 வசூலிக்கப்படுவதற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வங்கிகள் சேமிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அத்தகைய சேமிப்பில் இருந்து பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், வங்கிக் கணக்கில் இருந்து அவ்வப்போது ரூ.295 வசூலிக்கப்படும். இந்த தொகை எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்த பணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதில் காணலாம்.
NACH (National Automated Clearing House) விதிமுறைகளின் கீழ் கடன் EMI உரிய தேதியில் செலுத்தாதவர்களிடம் இருந்து ரூ.ரூ.295 வசூலிக்கப்படுகிறது. நீங்கள் வங்கியில் வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது கடன் வாங்கி இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதேபோல், வேறு ஏதாவது தொடர் வைப்பு நிதி போன்று மாதமாதம் செலுத்த வேண்டிய தொகை இருந்தாலும், அதனை உரிய தேதியில் செலுத்த வேண்டும்.
ஆனால், அந்த தேதியில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், அதற்கு ரூ.295 கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் வந்தபின் அந்த ரூ.295 கட்டணம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உரிய தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் அதற்கு 250 ரூபாய் அபராதம். அதற்கு 18% ஜிஎஸ்டி என 45 ரூபாய். மொத்தமாக வங்கிக் கணக்கில் இருந்து 295 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சில வங்கிகள் மாதந்தோறும் வசூலிக்கின்றன. ஆனால், சில வங்கிகள் பல மாதங்களுக்கு அபராதத்தை சேர்த்து மொத்தமாக வசூலிக்கின்றன.