டெபிட் கார்டு என்றால் என்ன? கண்டுபிடித்தது யார்? நன்மை தீமைகள் என்னென்ன?
டெபிட் கார்டுகள் பண பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டுரை டெபிட் கார்டுகளின் வரலாறு, பயன்கள், வகைகள், நன்மைகள், தீமைகள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் பற்றி விளக்குகிறது.
டெபிட் கார்டு என்பது வங்கிகளால் பண பரிவர்த்தனைக்கு பதிலாக வழங்கப்படும் கார்டு. இந்தக் கார்டு கொண்டு நமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம். ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
முதல் டெபிட் கார்டு:
கையில் பணம் அல்லது காசோலை எடுத்துச் செல்வதற்கு மாற்றாக 1966 ஆம் ஆண்டு டெபிட் கார்டு பைலட் திட்டத்தை டெலவேர் வங்கி அறிமுகப்படுத்தியது. வணிகர்களை அவர்களது மாநிலத்திற்கு வெளியே உள்ள வங்கிகளுடன் இணைக்கும் தொழில்நுட்பம் எதுவும் இல்லாததால், இந்த டெபிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தது.
ATM டெபிட் கார்டு:
அமெரிக்காவில் முதல் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் (ATM) நியூயார்க்கின் ராக்வில்லேவில் உள்ள கெமிக்கல் வங்கியில் 1969 ஆம் ஆண்டு தோன்றியது. ஒரு படிவம் மற்றும் பின் எண்ணைப் பயன்படுத்தி நுகர்வோர் பணத்தை எடுக்க முடியும். டெபிட் கார்டுகள் 1970 களில் வாடிக்கையாளர்களின் நண்பனாக மாறியது.
யார் டெபிட் கார்டு கண்டுபிடித்தது?
1950 இல் கண்டுபிடிக்கப்பட்டது, டைனர்ஸ் கிளப் கார்டு. இதுதான் முதல் நவீன டெபிட் கார்டு என்று அறியப்படுகிறது. நியூயார்க்கில் இரவு உணவிற்குச் சென்றபோது தனது பர்ஸ்சை மறந்துவிட்டார் பிராங்க் மிக்னமரா. அவரும் அவரது வணிக கூட்டாளியான ரால்ப் ஷ்னீடரும், பணத்தை எடுத்துச் செல்லாமல் பணம் செலுத்துவதற்கான ஒரு வழியாக டைனர்ஸ் கிளப் கார்டை விரைவில் கண்டுபிடித்தனர்.
இந்தியாவில் டெபிட் கார்டு:
இந்தியாவில் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி ஐசிஐசிஐ வங்கி.
இந்தியாவில் டெபிட் கார்டுகள்:
Diners Card:
இந்தியாவில் 1961 ஆம் ஆண்டில் காளி மோடி என்பவர் தனது நிறுவனத்தில் முதன் முறையாக Diners கார்டுகளை அறிமுகப்படுத்தினார்.
வங்கி டெபிட் கார்டு:
இந்தியாவில் முதல் வங்கி கிரெடிட் கார்டு 1980 இல் மத்திய வங்கியால் தொடங்கப்பட்டது
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்
ஐசிஐசிஐ வங்கி 2015 இல் நாட்டின் முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது
"ஏடிஎம் கார்டு" என்ற சொல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதிலிருந்து வந்தது. இந்தியாவில் முதல் ஏடிஎம் 1987 இல் எச்எஸ்பிசி வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
வங்கிகளில் கணக்கு திறக்கும்போதே வங்கிகள் டெபிட் கார்டு, கிரடிட் கார்டுகளை வழங்குகின்றன. இது தங்களது வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கிகள் வழங்குகின்றன.
வங்கிகளில் இருந்து வழங்கப்படும் இந்த கிரடிட் கார்டு, டெபிட் கார்டுகளை கட்டாயம் பெற வேண்டும் என்பதில்லை. வேண்டுமானால் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த கார்டுகளின் நன்மை தீமைகள் குறித்து அறிய வாய்ப்பில்லை. மேலும், இந்தக் கார்டுகளை பயன்படுத்துவதில் சமீபத்தில் சிக்கல்கள் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதால், படித்தவர்கள் கூட அச்சம் அடைந்துள்ளனர்.
டெபிட் கார்டு:
* இந்தக் கார்டு பயன்படுத்தும்போது உங்களது சேவிங் அக்கவுன்ட் அல்லது கரன்ட் அக்கவுண்டில் இருந்து பணம் கழிக்கப்படும்.
* உங்களது வங்கிக் கணக்கில் என்ன பணம் இருக்கிறதோ அந்தளவிற்கு தான் பொருட்கள் வாங்க முடியும், பணம் எடுக்க முடியும்.
* டெபிட் கார்டு உங்களது வருமானம், கரன்ட் அல்லது சேவிங் அக்கவுன்ட் பொருத்து வழங்கப்படுகிறது.
* டெபிட் கார்டு பயன்படுத்துவதற்கு ரிவார்ட் மற்றும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது
* இந்தக் கார்டின் மீது வழங்கப்படும் EMI என்பது வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே செய்யப்படும் ஒப்பந்தத்தை பொருத்தது.
டெபிட் கார்டுகளின் பயன்கள் என்னென்ன?
ATM-ல் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு பயன்படுத்தலாம்
பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தலாம்
உடனடியாக பணம் நம்முடைய அக்கவுண்டில் இருந்து பணத்தை வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றலாம்
ஆன் லைன் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம்
சில டெபிட் கார்டுகளுக்கு போனஸ் பாயின்ட்ஸ், கேஸ் பேக், இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது
நமது அக்கவுன்ட் மூலம் எவ்வளவு பணம் செலவழித்து இருக்கிறோம் போன்ற விவரங்களை நமக்கு வரும் இமெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆறு வகையான டெபிட் கார்டுகள் என்னென்ன?
விசா டெபிட் கார்டு
* விசா பேமென்ட் சர்வீசுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கார்டு வழங்கப்படுகிறது.
ரூபே டெபிட் கார்டு
இந்தியாவில் பயன்படுத்துவதற்கு என்று நேஷனல் பேமென்ட் கார்பரேஷன் ஆப் இந்தியாவால் கொண்டு வரப்பட்டது. டிஸ்கவர் நெட்வொர்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தேசிய நிதி மாறுதல் நெட்வொர்க் மூலம் ஏடிஎம் பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றன.
மாஸ்டர்கார்டு
உலகம் முழுவதும் பரவலாக மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கார்டு மாஸ்டர் கார்டு. MasterCard டெபிட் கார்டுகள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு மற்றும் பணம் செலுத்துதல் மற்றும் ATM-களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு பயன்படுகிறது. இந்த மாஸ்டர்கார்டுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள்
மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உலகளவில் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க உதவுகிறது. மேலும், ஆன்லைநில் பொருட்கள் வாங்குவதற்கும், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உதவுகின்றன.
கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகள்
இது நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகள் PoS டெர்மினல்களுக்கு அருகில் தட்டுவதன் மூலம் அல்லது அசைப்பதன் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது.
விசா எலக்ட்ரான் டெபிட் கார்டுகள்
விசா எலக்ட்ரான் டெபிட் கார்டுகள் விசா டெபிட் கார்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் அவை ஓவர் டிராஃப்ட் ஆப்ஷன் வழங்காது.
டெபிட் கார்டில் என்னென்ன இடம் பெற்று இருக்கும்:
டெபிட் அல்லது ஏடிஎம் கார்டு:
கார்டு உரிமையாளர்களின் பெயர் இருக்கும்
16 டிஜிட் எண்கள் இருக்கும்
எப்போது வழங்கப்பட்டது, எப்போது காலக்கெடு என்று கூறப்பட்டு இருக்கும்
EMV Chip இருக்கும்
கையெழுத்து பார் இருக்கும்
கார்டு வெரிபிகேஷன் வேல்யூ இருக்கும்
டெபிட் கார்டு கட்டணம்:
டெபிட் கார்டு கட்டணங்கள் வங்கிகளுக்கு வங்கி மற்றும் கார்டுகளுக்கு இடையே வேறுபடும்.
வருடாந்திர கட்டணம்: வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப டெபிட் கார்டு பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 500 என்று வேறுபடுகிறது.
கார்டு மாற்றுவதற்கான கட்டணம்: சில வங்கிகள் கார்டுகளை மாற்றும்போது கட்டணம் எதுவும் கேட்பதில்லை. குறிப்பாக கார்டுகள் சேதம் அடைந்தாலும் கட்டணம் எதுவும் கேட்பதில்லை. ஆனால், கார்டு தொலைந்து விட்டது என்று கூறி புதிய கார்டு கேட்டால், ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகளுக்கு ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதுவே எஸ்பிஐ மற்றும் சில வங்கிகள் ரூ. 100 முதல் ரூ. 300 வரை கார்டு சேதமானால் அல்லது தொலைந்து போனால் கட்டணம் வசூலிக்கும்.
போலி பின் அல்லது பின் மாற்றத்திற்கான கட்டணம்: நீங்கள் உங்களது டெபிட் கார்டின் பின் நம்பரை ஞாபகமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறந்துவிட்டால் மாற்று பின் நம்பர் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு ரூ. 50 அல்லது ரூ. 100 கட்டணம் விதிக்கப்படும்.
பணம் எடுப்பதற்கான கட்டணம்:
டிஎம்மில் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஆனால், அதற்கும் ஒரு வரைமுறை உள்ளது. எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டை, எஸ்பிஐ ஏடிஎம்மில் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், மற்ற வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும்போது, ரூ. 10 அல்லது ரூ. 30 கட்டணம் ஒரு முறை பணம் எடுப்பதற்கு செலுத்த வேண்டியது இருக்கும்.
சர்வதேச டிஜிட்டல் பணபரிமாற்ற கட்டணங்கள்:
சர்வ்தேச அளவில் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கார்டு பேலன்ஸ் செக் செய்வதற்கு, வெளிநாட்டு கரன்சியில் பணம் எடுப்பதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இது சதவீத அடிப்படையில் இருக்கிறது. மற்றபடி, பொருட்கள் வாங்குவதற்கு கூடுதலாக எந்தக் கட்டணமும் வசூளிக்கப்படுவது இல்லை. ஆனால், பெட்ரோல், டீசல் போடுவதற்கு சர்சார்ஜ் என்ற வகையில் 1% வசூலிக்கப்படும்.
டெபிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் என்ன?
இந்தியராக இருக்க வேண்டும்
15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
உங்களது வீட்டு முகவரிக்கான ஆதாரம் மற்றும் உங்களது அடையாள அட்டை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்
வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை வைத்து இருக்க வேண்டும்
வங்கி கொள்கைகளின்படி வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்
என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
பான் கார்டு
ஃபார்ம் 16 (பான் கார்டு இல்லை என்றால் ஃபார்ம் 16 சமர்ப்பிக்க வேண்டும்)
தற்போதைய இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்
அடையாள புரூப்:
வாக்காளர் அடையாள அட்டை
பாஸ்போர்ட்
டிரைவிங் லைசென்ஸ்
வீட்டு முகவரி புரூப்:
வாக்காளர் அடையாள அட்டை
டிரைவிங் லைசென்ஸ்
பாஸ்போர்ட்
ஆன்லைனில் எவ்வாறு டெபிட் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும்?
வங்கிக்கும் சென்று நீங்கள் டெபிட் கார்டு வாங்கலாம். இல்லை என்றால் ஆன்லைனிலும் விண்ணப்பித்து வாங்கலாம்.
* நீங்கள் தனியாக டெபிட் காட்டு கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது கரன்ட் வங்கி கணக்கு திறந்தாலே உங்களுக்கு டெபிட் கார்டும் கொடுத்து விடுவார்கள்
* புதிய டெபிட் கார்டு வேண்டுமானால், அருகில் இருக்கும் உங்களது வங்கிக்கு செல்லவும். விண்ணப்ப படிவம் இருக்கும் அதை பூர்த்தி செய்து வங்கி மேலாளரிடம் வழங்கவும். சில நாட்களில் உங்களுக்கு டெபிட் கார்டு வந்துவிடும்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
1. வங்கியின் அதிகாரபூர்வ, உதாரணத்திற்கு எஸ்பிஐ வெப்சைட் செல்லவும்
2. டெபிட் கார்டு தேர்வு உங்களுக்கு தேவையான கார்டை தேர்வு செய்யவும்
3. நீங்கள் கொடுத்து இருக்கும் முகவரிக்கு சில நாட்களில் டெபிட் கார்டு வந்துவிடும். இதேபோன்றுதான் மற்ற வங்கிகளின் டெபிட் கார்டுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்
டெபிட் கார்டு எவ்வாறு வேலை செய்யும்?
* சதுர வடிவில் இருக்கும் பிளாஸ்டிக் கார்டு வாடிக்கையாளரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும்
* இதில் 16எண்கள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து யுனிக் CCV Code இருக்கும்
* வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பொருத்து செலவு செய்வதற்கான பண லிமிட்டும் இருக்கும்
* டெபிட் கார்டில் காலக்கெடு கொடுக்கப்பட்டு இருக்கும். தேதி முடிந்தவுடன் வங்கி புதிய கார்டு கொடுக்கும்
* வங்கி கணக்கு திறக்கும்போது என்ன தகுதிகள் கேட்கப்படுகிறதோ அதுதான் டெபிட் கார்டு பெறவும் தகுதியாக உள்ளது
* எந்த வங்கி கணக்குடன் டெபிட் கார்டு இணைக்கப்பட்டு உள்ளதோ அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்
* ஒவ்வொரு முறை நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தும்போதும், உங்களது மொபைலுக்கு மெசேஜ் வரும்
ஏடிஎம்மில் டெபிட் கார்டு பயன்பாடு:
பெரும்பாலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்குத்தான் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தக் கார்டுகளை எங்கு, எதற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
Utility Bills: வீட்டு, அலுவலகம், தொழில் நிறுவங்களின் மின் கட்டணங்கள், இன்சூரன்ஸ், மொபைல் கட்டணம் ஆகியவற்றை டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டலாம்.
Cheque Book: எந்த வங்கியின் டெபிட் கார்டு வைத்து இருக்கிறீர்களோ அந்த வங்கியின் செக் புத்தகத்தை கேட்டு வாங்கலாம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த முகவரியில் இருக்கிறீர்களோ அந்த முகவரிக்கு செக் புத்தகம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்
Payments Using ATM Cards: பெரும்பாலான ஏடிஎம்களில் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் வசதி உள்ளது. இருப்பினும், கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம்மில் பணம் செலுத்துவது அவசியம்.
Paying Taxes through ATM Cards: ஏடிஎம்மில் வரி செலுத்தும் சேவையைப் பயன்படுத்த, அட்டைதாரர்கள் பதிவு செய்ய வேண்டும். நேரடி வரி செலுத்துவதற்கு மட்டுமே இந்த சேவையை பயன்படுத்துவது ஒரே வழி. டெபிட் கார்டுதாரர்கள் சேவையில் சேரும்போது செலுத்த வேண்டிய பணம் அவரது கணக்கிலிருந்து கழிக்கப்படும். பணம் டெபிட் செய்யப்பட்ட பின்னர் டெபிட் கார்டுதார்களுக்கு ஒரு சிறப்பு எண் அனுப்பப்படும். அதை அவர்கள் தங்கள் வரிகளைச் செலுத்துவதற்கு ஒரு அடையாளமாக பயன்படுத்த வேண்டும்.
Mobile Phone Recharges through ATM Card: டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ் செய்யலாம். இதைச் செய்ய, டெபிட் கார்டு பெறப்பட்ட வங்கி ஏடிஎம்மிற்கு செல்லவும். அட்டைதாரர் தங்கள் மொபைல் எண் மற்றும் ஏடிஎம் பின்னை உள்ளிட்டு பரிவர்த்தனையை உறுதி செய்து அங்கீகரிக்க வேண்டும்.
டெபிட் கார்டுகளின் வகைகள்:
Standard Debit Cards:
வங்கிகளால் வழங்கப்பட்டு சேமிப்பு அல்லது காசோலை கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.
Prepaid Debit Cards:
இந்த வகை டெபிட் கார்டுகளில் பணம் ஏற்றப்பட்டு இருக்கும். வங்கியுடன் இணைக்கப்பட்டு இருக்காது.
Virtual Debit Cards:
ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் வேலட்ஸ்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
டெபிட் கார்டுகளின் நன்மைகள்
கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. இதனால் பாதுகாப்பு பயமும் இல்லை. பணத்தை தொலைத்துவிட்டோம், திருடி விட்டனர் என்ற பயமும் வேண்டாம்.
நேரடி நிதி பயன்பாடு:
வாடிக்கையாளர்கள் தங்களது பண லிமிட்டுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம். எனவே, அதிகமாக செலவழிக்க முடியாது. கட்டுப்பாடு இருக்கும். கடன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
உலகளவில் ஏற்றுக் கொள்ளுதல்:
உலகளவில் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பு:
டெபிட் கார்டு தொலைந்து விட்டது என்று உடனடியாக புகாரளித்தால் மோசடி தடுக்கப்படும்.
பாதுகாப்பு அபாயங்கள்:
கார்டு ஸ்கிம்மிங், ஃபிஷிங் போன்ற சிக்கல்கள் எழலாம்
வெகுமதி திட்டங்கள்:
கிரெடிட் கார்டுகளைப் போல் டெபிட் கார்டுகளில் பொதுவாக கேஷ்பேக் மற்றும் வெகுமதி திட்டங்கள் இல்லை.
வங்கிக் கணக்கில் பணம்:
பரிவர்த்தனை நேரடியாக வங்கி கணக்குடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் அல்லது போதுமான நிதி இல்லாத சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
கிரடிட் ஸ்கோர்:
கடன் வாங்க முடியாது என்பதால் கிரடிட் ஸ்கோர் கிடைக்க வாய்ப்பில்லை
டெபிட் கார்டு - கிரடிட் கார்டு வித்தியாசம் என்ன?
டெபிட் கார்டு:
நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்
உங்களது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே இந்தக் கார்டு பயன்படுத்த முடியும்
நமது வருமானம், கரன்ட் அக்கவுன்ட், சேவிங் அக்கவுன்ட் அடிப்படையில் வழங்கப்படுகிறது
உங்களது வங்கிக் கணக்கின் அடிப்படையில் தான் இந்தக் கார்டு வழங்கப்படுகிறது
டெபிட் கார்டு மீது லிமிடெட் ரிவார்டு மற்றும் கேஷ்பேக் வழங்குகின்றனர்
EMI என்பது வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலானது
உங்களுடைய கிரடிட் கார்டு ஸ்கோரை டெபிட் கார்டு பாதிக்காது
ஏடிஎம்/டெபிட் கார்டு அதிக பணத்தை எடுப்பதற்கு வழிவகுக்கும்
வருடாந்திர பாரமரிப்பு கட்டணமாக ரூ. 100 அல்லது ரூ. 500 வசூலிக்கப்படுகிறது
கிரடிட் கார்டு: நாம் வாங்கும் சம்பளம், வாங்கும் கடன், அதன் மீது கட்டும் மாதந்திர EMI தொகை. சரியாக செலுத்தப்படுகிறதா என்பதன் அடிப்படையில் கொடுக்கப்படுவது
உங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்
நீங்கள் வங்கிக் கணக்கு இல்லை என்றாலும் கிரடிட் கார்டு பெற்று கடன் பெறலாம்
கிரடிட் கார்டு அதிகபட்சமான ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் வழங்குகிறது
ரூ. 2,500-க்கு நாம் ஏதாவது வாங்கி இருந்தாலே EMI வசதியை கிரடிட் கார்டு அளிக்கிறது
கிரடிட் கார்டு பயன்பாடு நேரடியாக உங்களது கிரடிட் ஸ்கோரை பாதிக்கும்
கிரெடிட் கார்டுகள் கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன, அதாவது லவுஞ்ச் அணுகல் மற்றும் தொலைந்த கார்டுகளிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றன
வருடாந்திர உறுப்பினர் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்
FAQ on Debit Cards: டெபிட் கார்டில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
டெபிட் கார்டில் CVV என்றால் என்ன?
CVV - கார்டு வெரிபிகேஷன் வேல்யூ என்று அழைக்கப்படுகிறது. அதாவது கார்டு சரிபார்ப்பு மதிப்பு எண் ஆகும். இது உங்கள் அட்டையின் பின்புறத்தில் நபரின் அடையாளத்தை சரிபார்க்க வழங்கப்படும் 3 இலக்க எண்ணாகும்.
வாழ்நாள் இலவச டெபிட் கார்டு வழங்கும் வங்கி எது?
HSBC இலவச வாழ்நாள் டெபிட் கார்டு வழங்குகிறது. எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.
ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு ஒன்றா?
இல்லை, ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு வேறு வேறானது. ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் டெபிட் கார்டுகளை பணம் எடுக்கவும் ஆன்லைன் கட்டணங்களுக்கும் பயன்படுத்தலாம்.
டெபிட் கார்டாக ஏடிஎம் கார்டை பயன்படுத்த முடியுமா?
இல்லை, ஏடிஎம் கார்டுகளை டெபிட் கார்டாக பயன்படுத்த முடியாது. இருப்பினும், டெபிட் கார்டை ஏடிஎம் கார்டாக பயன்படுத்தலாம்.
ஆன்லைன் பணம் செலுத்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தலாமா?
ஆன்லைன் பேமென்ட் செலுத்துவதற்கு முன்பு ஏடிஎம் பயன்படுத்த முடியாது. ஆனால், சில வங்கிகள் தற்போது அந்த பயனபாட்டையும் அறிமுகம் செய்துள்ளது. இப்போது ஏடிஎம் கார்டு பயனர்களும் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
எனது ஏடிஎம் கார்டின் பின் எண்ணை மாற்ற முடியுமா?
ஆண். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஏடிஎம் கார்டின் பின் எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.
ஏடிஎம்மில் இருந்து தினமும் பணம் எடுக்க கட்டுப்பாடு இருக்கிறதா?
ஆம். வங்கிகள் தங்களுக்கு ஏற்றவாறு வரையறுத்துள்ளது
எவ்வளவு ஆண்டுகளுக்கு டெபிட் கார்டுகளுக்கு வேலிடிட்டி இருக்கிறது?
எட்டு ஆண்டுகளுக்கு வேலிடிட்டி இருக்கிறது. இதிலும் வங்கிகளுக்கு ஏற்றவாறு வேலிடிட்டி உள்ளது
வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் டெபிட் கார்டு பயன்படுத்தலாமா?
பயன்படுத்த முடியாது. வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும். சில வங்கிகள் மட்டும் ஓவர்டிராப்ட் என்ற பெயரில் இந்த வசதியை வழங்குகிறது.
டெபிட் கார்டு அதிக நாட்கள் பயன்படுத்தவில்லை என்றால் அபராதக் கட்டணம் விதிக்கப்படுமா?
ஆம். செயல்படுத்தப்படவில்லை என்பதன் கீழ் அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.
டெபிட் கார்டு பின் எத்தனை இலக்கம் கொண்டது?
நான்கு இலக்கம் கொண்டது
ஒரு டெபிட் கார்டு கொண்டு பல வங்கிகளின் சேவையை பெறலாமா?
ஆம். சில வங்கிகள் இதற்கு அனுமதிக்கிறது.
தவறான பின் நம்பர் என்டர் செய்தால் என்னவாகும்?
மூன்று முறைக்கு மேல் தவறான பின் நம்பரை என்டர் செய்தால் வங்கி அந்த டெபிட் கார்டை பிளாக் செய்துவிடும். பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது.
டெபிட் கார்டு தொலைந்தால் என்ன செய்வது?
உடனடியாக உங்களது வங்கிக்கு தெரிவிக்கவும். வங்கி கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும். உடனடியாக உங்களது கார்டை தவறாக யாரும் பயன்படுத்தாமல் தடுக்கப்படும்.
புதிய டெபிட் கார்டின் பின் நம்பர் எவ்வளவு நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது?
பாதுகாப்பு காரணமாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பின் நம்பரை மாற்றிக் கொள்ளலாம்.
டெபிட் கார்டுகளின் எதிர்காலம்:
பயோமெட்ரிக் கார்டுகள்: டெபிட் கார்டுகள் இன்னும் அதிக பாதுகாப்பிற்காக கைரேகை அல்லது விழித்திரை ஸ்கேனிங் மூலம் ஒருங்கிணைக்கப்படலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அட்டைகள்: மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகள்.
டிஜிட்டல்-பர்ஸ்ட் கார்டு: கார்டுகள் இல்லாமல், ஆப் வழியாக அல்லது வெர்சுவல் வழியாக டிஜிட்டல் கார்டுகள் அறிமுகம் செய்வது
பிராந்திய நெட்வொர்க்குகள்: யூனியன் பே (சீனா), ரூபே போன்ற நெட்வொர்க்குகள் உலகளவில் விரிவடைந்து, விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக களத்தில் உள்ளன.
டெபிட் கார்டு பயன்பாடு:
வர்த்தக் நிறுவனங்களில்: முனையத்தில் ஸ்வைப் செய்து, செருகி, பின் எண் பதியவும்
ஆன்லைன்: வாங்குவதற்கு கார்டு எண், காலாவதி தேதி மற்றும் CVV (பாதுகாப்பு குறியீடு) ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
பணம் எடுப்பதற்கு: பணத்தை எடுக்க ATM அணுகவும்.
பாதுகாப்பு குறிப்புகள்:
உங்களது டெபிட் பின் நம்பரை ரகசியமாக வைத்திருக்கவும்
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உங்களது கணக்கைத் தொடர்ந்து கண்காணித்து வரவும்
பாதுகாப்பான PIN நம்பரை பயன்படுத்தவும். யாரிடமும் பகிர வேண்டாம்.
கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.
டெபிட் கார்டைப் பெறுதல், அதை திறம்பட பயன்படுத்துதல் அல்லது சிக்கலைத் தீர்ப்பதில் உங்களுக்கு உதவி வேண்டுமா?