we can take money from atm 10 times per month



ஏடிஎம்மில் 10  முறை இலவசமாக பணமெடுக்கலாம்

ரூபாய் நோட்டு பண மதிப்பு இழப்பிற்கு பிறகு,  நாட்டில்  பல்வேறு துறைகளில்      பல   மாற்றங்கள்     ஏற்பட்டது . மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டது.  அந்த  வேளையில்  புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட 2,௦௦௦ ரூபாய் மற்றும்  பழைய 1௦௦ ரூபாய் தாள்களை  ஏ டி எம்மில்  இருந்து  எடுப்பதற்கு மக்கள்  கூட்டம்  அலைமோதிய  சம்பவம் எதனையும்  யாரும் மறந்திருக்க முடியாது.

 pஇதனை தொடர்ந்து,  ஏ டி எம்  இலிருந்து எத்தனை முறை வேண்டுமாளாலும் பணத்தை  எடுத்துக்கொள்ளலாம் என மத்திய  அரசு அறிவித்து இருந்தது அதாவது   பணம் எடுப்பதற்கு கட்டணம்  வசூலிக்க படமாட்டாது என  தெரிவிக்கப்பட்டது . இந்த  நடைமுறை  தற்போது மாறி ,  பல தனியார்  வங்கிகள்  மாதத்தில்  ஒரு  குறிப்பிட்ட  முறைக்கு மேல்   பணம் எடுத்தால்  கட்டணம் வசூலிக்கப் படும் என  தெரிவித்து இருந்தது.

அதன்படி, ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில்  பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ  வங்கியானது, ஏடிஎம்.,களில், மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம்  எடுத்துக்கொள்ளலாம்  என தெரிவித்துள்ளது

இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும்  சேவிங்  வங்கி கணக்கில்  குறைந்தபட்ச  கையிருப்பாக  5௦௦௦ ரூபாய்  வரை ,  வாடிக்கையாளர்கள்  கட்டாயம்  வைத்திருக்க  வேண்டும் என  எஸ் பி ஐ  ஏற்கனவே  அறிவித்துள்ள  நிலையில், கட்டணமில்லாமல்  மாதத்திற்கு 10 முறை  ஏடிஎம் மில்லிருந்து  பணம்  எடுத்துக்கொள்ளலாம்  என அறிவித்துள்ளது   குறிப்பிடத்தக்கது