we can get all things in lowest rate once gst came to act

இனி அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் – நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிரடி

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், அனைத்து பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அதாவது வரும் ஜூலை 1 ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அதன் பின்பு பொருட்களின் விலை குறையும் என தெரிகிறது .

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என மோடி அறிவித்த பின்பு, இந்தியா 7 முதல் 8 சதவீத வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார் .

தொடர்ந்து பேசிய அருண் ஜெட்லி , சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தால், வரிக்கு வரி செலுத்த வேண்டிய நடைமுறை ஜிஎஸ்டியில் இருக்காது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் குறையும்.

நாடாளுமன்டத்தின் அனுமதிக்கு பின், இந்த சட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதால் பொருட்களின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்கப்படுகிறது