அடுத்த வருடம் முதல், உங்கள் மொபைலில் “வாட்ஸ் ஆப் இயங்காது”......அதிர்ச்சி தகவல்....!!!
மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப்,நம்மில் பயன்படுத்தாதோர் யாரும் இல்லை .......
ஆனால், தற்பொழுது ஒரு சில செல்போனில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, குறிப்பிட்ட சில ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஆண்டு இறுதியுடன் வாட்ஸ் அப் செயல்படாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி :
ஒரு சில ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள செல்போன் மாடல்களில் இந்த ஆண்டுக்கு பிறகு வாட்ஸ் ஆப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BlackBerry OS and BlackBerry 10
Nokia S40
Nokia Symbian S60
Android 2.1 and Android 2.2
Windows Phone 7.1
iPhone 3GS/iOS 6
மேல குறிப்பிட்ட அனைத்திலும் , அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆப் இயங்காது என வாட்ஸ் ஆப் நிறுவனமே தெரிவித்துள்ளது.
