Asianet News TamilAsianet News Tamil

vw virtus price : ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இந்திய வெளியீட்டு விவரம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் விர்டுஸ் மிட்-சைஸ் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

VW Virtus India launch in May 2022, world premiere in March
Author
Tamil Nadu, First Published Jan 21, 2022, 4:01 PM IST

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் புதிய விர்டுஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் கார்களில் மிகப்பெரும் வெளியீடாக விர்டுஸ் இருக்கிறது. 

புதிய விர்டுஸ் மிட்-சைஸ் செடான் மாடல் 12 ஆண்டுகள் பழைய வெண்டோ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியீடு பல முறை மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த மாடல் மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

"புதிய குளோபல் செடான் மாடலை அறிமுகம் செய்து எங்களின் வாகனங்களை ரவுண்ட் அப் செய்ய இருக்கிறோம். மார்ச் மாத வாக்கில் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து மே மாதத்தின் மூன்றாவது வாரம் இந்தியாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும்," என ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிராண்டு இயக்குனர் அசிஷ் குப்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

VW Virtus India launch in May 2022, world premiere in March

தென் அமெரிக்கா நாடுகளில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் 2018 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஃபேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதே மாடல் தான், இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் இதன் விற்பனை முதலில் இந்தியாவில் தான் துவங்குகிறது. அதன்பின் தென் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய விர்டுஸ் ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் - மேம்பட்ட பம்ப்பர்கள், கிரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் உள்புறத்தில் மேம்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது. விர்டுஸ் மாடல் வெண்டோவை விட அளவில் பெரிய கார் ஆகும். 

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் விர்டுஸ் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின்  MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஃபேக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 மாடல்கள் அனைத்துமே இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், விரைவில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற மாடல்கள் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. 3 சிலிண்டர் டர்போ என்ஜின், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. 4 சிலிண்டர் டர்போ என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக்  கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது.

ன் அதிகம் எதிர்பார்க்கப்படும் விர்டுஸ் மிட்-சைஸ் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios