vijay mallaya latest news:  வங்கியின் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து ரூ.19ஆயிரத்து 111 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கியின் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து ரூ.19ஆயிரத்து 111 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோடிக்கணக்கில் கடன்

தொழிலதிபர் விஜய் மல்லையா, வைரவியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்ஸிஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இவர்களைப் பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசும் முயற்சிகளை எடுத்துவருகிறது. இதுவரை அதற்கு பலன் இல்லை.

ரூ.19ஆயிரம் கோடி 

இந்நிலையில், இந்த மூன்று தொழிலதிபர்களிடமும் இருந்து எவ்வளவு சொத்துக்கள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டுள்ளன என்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தாவது:

விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி, நிரவ் மோடி ஆகியோர் வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடினர். இவர்கள் 3 பேரால் வங்கிகளுக்கு ரூ.22ஆயிரத்து 585.83 கோடி இழப்பு ஏற்பட்டது.

பறிமுதல்

2022, மார்ச் 15ம் தேதிவரை இந்த 3 பேரிடம் இருந்து சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் ரூ.19ஆயிரத்து111.20 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ரூ.19ஆயிரத்து 111 கோடி சொத்துக்களில் ரூ.15ஆயிரத்து 113.19 கோடி சொத்துக்கள் விற்கப்பட்டு, பொதுத்துறை வங்கிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.335 .06 கோடி சொத்துக்கள் மத்திய அரசுக்கு சொந்தமானவை.

எஸ்பிஐ வங்கி

2022, மார்ச் 15ம் தேதிவரை இந்த வழக்கில்தொடர்புடைய 84.61 சதவீத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 66.91 சதவீதம் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2022, மார்ச் 15ம் தேதியன்று, ரூ.7,975.27 கோடி சொத்துக்கள் எஸ்பிஐ வங்கியிடம் அமலாக்கப்பிரிவுத்துறையினர் ஒப்படைத்துள்ளனர். 
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்