ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் செடான் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய காம்பேக்ட் செடான் மாடல் மார்ச் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் மாடலுக்கான டீசரை ஃபோக்ஸ்வேகன் இந்தியா வெளியிட்டு உள்ளது.
புதிய டீசரில் ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் செடான் மாடலின் டாப் ஆங்கில் காட்சியளிக்கிறது. இந்த கார் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த மாடல் MQB-AO-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டசு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய சந்தையில் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் வெண்டோ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் அளவில் 451mm நீளமும், 1752mm அகலமும், 1487mm உயரமும், வீல்பேஸ் 2651mm அளவிலும் இருக்கிறது. டீசரில் புதிய கார் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிரம்மாண்ட கிரில், தடிமனான முன்புற பம்ப்பர், பூட் லிப் ஸ்பாயிலர், முன்புறம் GT பேட்ஜிங் வழங்கப்படுகிறது.
புதிய மாடலில் 10 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மல்டி-ஃபன்ஷனல் ஸ்டீரிங் வீல், வயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேடெட் சீட்கள், ரியர் ஏ.சி. வெண்ட்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் இரண்டு டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்களாக இருக்கும் என தெரிகிறது. இதே என்ஜின் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டைகுன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய செடான் மாடலில் பல்வேறு ஆடம்பர மற்றும் சவுகரிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹோண்டா சிட்டி மற்றும் இதர சில மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
