Asianet News TamilAsianet News Tamil

Income tax slab :Budget2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

new income tax slabs:புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Under the new tax structure, there is no tax on income up to Rs 7 lakh and a standard deduction is permitted.
Author
First Published Feb 1, 2023, 3:29 PM IST

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதேசமயம், பழைய வரிவிதிப்பு முறை தொடரும். இந்த வரிவிதிப்பு முறையிலும் ஐடி ரிட்டன் தாக்கல் செய்து, வரிவிலக்கு, முதலீட்டு, செலவுக் கழிவுகளை அரசிடம் இருந்து பெற முடியும்.

Under the new tax structure, there is no tax on income up to Rs 7 lakh and a standard deduction is permitted.

மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்

அதேசமயம், புதிய வருமானவரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்கள் எந்தவிதமான முதலீட்டுக் கழிவுகளையும், விலக்குகளையும் அரசிடம் இருந்து பெற முடியாது. 

ஆனால், ரூ.50 ஆயிரம்வரை நிரந்தரக் கழிவு மட்டும் பெறலாம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பழைய வரிவிதிப்பு முறையில் இதேபோன்ற கழிவுகள் இருப்பதால், ரூ.5 லட்சம்வரை வருமானம் இருப்போர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2.50 லட்சம் வரை பழைய வரிவிதிப்பு முறையில் இருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் ஈட்டுபவர் ரூ.33,800 வரை சேமிக்க முடியும். 

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.23,400 வரையிலும், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.49,400வரை சேமிக்க இயலும்.

பட்ஜெட் அறிவிப்பில் விலை குறையும், உயரும் பொருட்கள் என்னென்ன? முழு விவரம்

வருமானம்

வரி விகிதம்(புதியது)

வருமானம் வரி

விகிதம்(பழையமுறை)

0-ரூ.3 லட்சம்

வரி இல்லை

0-ரூ5 லட்சம்

வரிஇல்லை

ரூ.3-ரூ.6 லட்சம்

5%

ரூ.5.-ரூ.7.5 லட்சம்

10%

ரூ.6-ரூ.9 லட்சம்

10%

ரூ.7.5-ரூ.10 லட்சம்

15%

ரூ.9-ரூ.12 லட்சம்

15%

ரூ.10-ரூ.12.50 லட்சம்

20%

ரூ.12-ரூ.15 லட்சம்

20%

ரூ.12.50- ரூ.15 லட்சம்

30%

உயர்வருமானம் உள்ள பிரிவினரான ஆண்டுக்கு ரூ.2 கோடிவரை வருமானம் ஈட்டுவோருக்கான சர்சார்ஜ் 37சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5.50 கோடி வருமானம் ஈட்டுவோர் ரூ.20 லட்சம்வரை சேமிக்க முடியும்.

  • புதிய வருமானவரி முறையின் படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.
  • ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரிவதிக்கப்படும்.
  •  ரூ.6 முதல் ரூ.9 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  • ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வரிவிதிக்கபப்டும்.
  • ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரிவிதிக்கப்படும்
  • ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். 
  • ரூ.15.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக ரூ.52.500வரை நிரந்தரக் கழிவு பெறலாம்.
Follow Us:
Download App:
  • android
  • ios