Oil prices: பதறும் அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை விர்ர்ர்ர்ர்…: ஸ்டாக் வெளியேற்றம்

Oil prices: உக்ரைன் மீது ரஷ்யா தொடத்துவரும் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்பேரல் 110 டாலரைக் கடந்துள்ளதால் அமெரிக்கா பதற்றம் அடைந்துள்ளது.

U.S. oil price surges 11% to $106 a barrel

Oil prices: உக்ரைன் மீது ரஷ்யா தொடத்துவரும் போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய்பேரல் 110 டாலரைக் கடந்துள்ளதால் அமெரிக்கா பதற்றம் அடைந்துள்ளது.

உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்துவருதையடுத்து,ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள்,அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. உக்ரைன், ரஷ்யா இடையே பேச்சு நடந்தும் அதில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்பதால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

U.S. oil price surges 11% to $106 a barrel

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய்விலை பேரல் 100 டாலரைக் கடந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 4.8%  உயர்ந்து பேரல் 110 டாலரைக் கடந்துள்ளது, வெஸ்ட் டெக்ஸ் விலை 5 சதவீதமும்அதிகரித்து, பேரல் 108 டாலரைக் கடந்துள்ளது.

இதனால் 30 நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பு, தங்கள் இருப்பில் இருந்து 6கோடி பேரல் கச்சா எண்ணெயை சந்தையில் வெளியி்ட்டு விலையைக்கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. 

சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஃபாதி பிரோல் கூறுகையில் “ உலகளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க வேண்டியுள்ளது. சர்வதேச எரிசக்தி பயன்பாடும் சிக்கலாகியுள்ளது, உலகப் பொருளாதாரமே பெரியஅச்சறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இருப்பில் உள்ள 150 கோடி பேரல்களில் இருந்து 4% அதாவது 6 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை மட்டும் விடுவிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

U.S. oil price surges 11% to $106 a barrel

அமெரிக்கா விடுவிக்க இருக்கும் 6 கோடி பேரல்கள் என்பது ரஷ்யாவின் ஒருவார கச்சா எண்ணெய் உற்பத்திக்குச் சமமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அகோரமான கச்சா எண்ணெய் தேவைக்கு இந்த 6 கோடி  பேரல்கள் போதாது. 

உலகளவில் நாள்தோரும் ஒரு கோடி பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால்,இதில் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களை மேற்கத்திய நாடுகளக்கு ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது. 

ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களில் மூன்றில் இரு பங்கு ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதியாகிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகளுக்கும் , ஆசியாவில் சில நாடுகளுக்கும் செல்கிறது.
ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதித்து கச்சா எண்ணெய் வாங்காமல் வீராப்புக்காட்டினால், பாதிக்கப்படப்போவது ரஷ்யாவின் பொருளாதாரம் அல்ல, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம்தான். 

U.S. oil price surges 11% to $106 a barrel

ஐரோப்பிய நாடுகளுக்கு வசந்தகாலம்வரை பயன்படுத்தக்கூட போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு இல்லை. அப்படியிருக்கும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது மோசமானவிளைவுகளை ஏற்படுத்தும் என ஜெர்மனி கவலைப்படுகிறது. 

ரஷ்யாவிலிருந்துகச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் பேரல் 150 முதல் 200 டாலர் வரை உயர்ந்துவிடும் என்று அமெரிக்கா பதறுகிறது. ஆதலால், அமெரிக்கா,ஜெர்மனி நாடுகள், தாங்கள் விதித்த பொருளாதாரத் தடையால் ரஷ்யா பாதிக்கப்படுவதைவிட தங்கள் நாடுகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தடை குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.

U.S. oil price surges 11% to $106 a barrel

வளைகுடா நாடுகளைக் கொண்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ஒபேக்கும்தங்களின் தினசரி உற்பத்தியை 4 லட்சம் பேரலுக்கு அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதால், ரஷ்யாவை நம்பி இருப்பதைத் தவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வேறு வழியில்லை, அல்லது மாற்று வழியைத் தேட வேண்டும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios