தங்கம் விலை நிலவரம் இன்று நடுத்தர மக்களுக்கு ஷாக் இல்லாமல் இருக்கிறது.  

தங்கம் விலை நிலவரம் இன்று நடுத்தர மக்களுக்கு ஷாக் இல்லாமல் இருக்கிறது.
தங்கம் விலையில் இன்று எந்தமாற்றமும் இல்லாமல் கடந்த சனிக்கிழமை நிலவரத்திலேயே தொடர்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை) கிராம் ரூ.5,350ஆகவும், சவரன் ரூ.42 ஆயிரத்து 800 ஆக இருந்தது. அதே விலையில் இன்றும் தொடர்கிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,350க்கு விற்கப்படுகிறது.

மீண்டும் மக்களை சுற்றலில் விடும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த வாரம் கணிக்க முடியாத நிலையில் மாற்றங்களுடன் நகர்ந்து வந்தது. வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை சிறிதளவு மட்டும் குறைந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், இருப்பது நடுத்தர குடும்பத்து மக்களுக்கு ஷாக் அளிக்காத நிலைதான். 

கடந்த வாரத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.27 அதிகரித்து, சவரனுக்கு ரூ.216 ஏற்றம் கண்டது. இதில் அதிகபட்சமாக ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்து பின்னர் சரிந்தது. இந்தவாரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்புக்குப்பின் தங்கத்தின் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏறியவேகத்தில் இறங்கிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.20 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.74.70ஆகவும், கிலோவுக்கு 500 உயர்ந்து ரூ.74,700 ஆகவு அதிகரித்துள்ளது