கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 12வது நாளாக தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.