Today Gold Rate In Coimbatore And Madurai: ஒரே நாளில் சர்ன்னு எகிறிய தங்கம்.. கோவை, மதுரையில் என்ன நிலவரம்?

கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவெடி குறைந்து வந்தது. 

Today gold rate in coimbatore and madurai on August 01 2024 tvk

தங்கத்தின் விலை உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தினமும் தங்கம் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது. அதன்படி இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவெடி குறைந்து வந்தது. இதற்கு மற்றொரு காரணம் சீனாவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக தேவை உள்ளது. சீனாவில் தங்கத்திற்கான தேவை குறையும் போது உலக அளவில் தேவை குறைந்ததை அடுத்து விலையில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரசரவென குறைந்து வந்த தங்கம் கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. 

இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்கள் ஷாக்! மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! இன்றைய நிலவரம் இதோ!

இந்நிலையில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை தங்கம் நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். இன்றைய (ஆகஸ்ட் 01) நிலவரப்படி கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,420-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,885-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,080-ஆக விற்பனையாகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios