இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்க நகை வாங்க விரும்புபவர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய நேரம் இது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,529 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,538 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 72 ரூபாய் குறைந்து 36,232 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சிறிது உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.30 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து, 65,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
