Gold Rate Today : கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மாறி மாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,834 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,793 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 38,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 328 ரூபாய் அதிகரித்து 38,672 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.