Gold Rate Today :  தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்து உள்ளது. இந்த செய்தி நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

சிக்கலில் பொருளாதாரம் :

உலகம் முழுவதும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் எதிரொலியாக அனைத்து இடங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. 

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,796 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 38,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 38,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.72.30 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 72,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.