Gold Rate Today :  உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,868 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 39,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் குறைந்து 38,944 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.20 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.