கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்க விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,542 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,530 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 36,336 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.