Asianet News TamilAsianet News Tamil

GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி…மீண்டும் விலையேறும் தங்க விலை… எவ்வளவு தெரியுமா ?

சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

Today gold and silver price in chennai tamilnadu
Author
Tamilnadu, First Published Jan 12, 2022, 9:10 AM IST

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உலக அளவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. மேலும் வரும் காலங்களில் இன்னும் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்தனர். அதற்கு எதிர்மாறாக தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

Today gold and silver price in chennai tamilnadu

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,487 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,472 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் அதிகரித்து 35,896  ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Today gold and silver price in chennai tamilnadu

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.60 ஆக அதிகரித்து இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து  66,600 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios