சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தங்கத்தின் விலை உலக அளவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் இன்னும் குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,549 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.30 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.