உலகின் மிக விலை உயர்ந்த புறா ஒன்று 100 BMW கார்களின் விலையை விட அதிகமாக உள்ளது. இந்த புறாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

உலகின் மிக விலை உயர்ந்த புறா 

உலகில் பல விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவற்றின் விலை கோடிகளில் இருக்கும், ஆனால் 100க்கும் மேற்பட்ட BMW கார்களை வாங்கக்கூடிய ஒரு புறா (மிக விலையுயர்ந்த புறா) பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உலகின் மிக விலையுயர்ந்த பறவையாகவும் கருதப்படுகிறது. புறா மட்டுமல்ல, சில கிளிகள் மற்றும் கோழிகளும் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றின் சிறப்புகள் மற்றும் விலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

100 BMW கார்களை விட அதிகம்

உலகின் மிக விலையுயர்ந்த பறவை அர்மாண்டோ என்ற பந்தயப் புறா ஆகும். இந்த புறா மிக விலையுயர்ந்த பறவை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், அர்மாண்டோ என்ற இந்த பந்தயப் புறா 1.4 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 115 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது ஒரு சாம்பியன் பந்தய புறா ஆகும். இது அதன் வேகத்திற்காக வளர்க்கப்படுகிறது. அவை நீண்ட தூரம் பறக்க பயிற்சி அளிக்கப்படுகின்றன. 

இந்த புறாக்கள் மணிக்கு 60 மைல் வேகத்தில் பறக்க முடியும். தற்போது BMW X4 விலை 96.20 லட்சம் ரூபாய் அதாவது சுமார் 1 கோடி என்ற அளவில் உள்ளது. இந்த அர்மாண்டோ புறாவின் விலையில் 100க்கும் மேற்பட்ட BMW கார்களை வாங்க முடியும்.

மிக விலையுயர்ந்த கிளி 

நியூ கினியாவில் கருப்பு பனை காக்காட்டூ Hyacinth Macawஎன்ற பெரிய கிளி காணப்படுகிறது. இந்த கிளியின் இறகு கருப்பாகவும், அலகு மிகப் பெரியதாகவும் இருக்கும். கருப்பு பனை காக்காட்டூவின் விலை 15,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். உலகின் மிகப்பெரிய கிளியான‌ Hyacinth Macawதென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இது மூன்று அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் விலை 10,000 டாலர்கள் அதாவது சுமார் 8 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.

கருப்பு இறைச்சி கொண்ட கோழிகள்

அயம் செமானி கோழி என்பது இந்தோனேசியாவில் காணப்படும் ஒரு அரிய வகை. இது அதன் கருப்பு இறகுகள், கருப்பு தோல் மற்றும் கருப்பு இறைச்சிக்காக பிரபலமானது. இந்த கோழிகள் மிகவும் விலை உயர்ந்தவை. இவற்றின் விலை 2,500 டாலர்கள் அதாவது சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.