இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பை (2022-23) 6.5% இலிருந்து 6.9% ஆக உலக வங்கி உயர்த்தியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் ஆண்டுகளில் பொருளாதாரம் சுருங்கியதை தொடர்ந்து, தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வலுவாக மீண்டுள்ளது. உள்நாட்டுத் தேவை அதிகரித்து இருப்பதால் இந்த பொருளாதார மீள்வு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இந்தியா இப்போது மிகவும் முன்னேற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்தியா உலகளாவிய அளவில் முன்னோக்கி செல்கிறது உவுகின்றன'' என்று உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா தெரிவித்துள்ளார்.
அதே சமயம் 2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கான 6.4% என்ற இலக்கை இந்திய அரசு அடையும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவின் பொருளாதார மந்தம் காரணமாக, இதன் பாதிப்பு, இந்தியா மீது பிரதிபலித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவும், அதன் உலகளாவிய சக நாடுகளைப் போலவே, மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய மந்தநிலை இந்தியாவில் மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 6.3% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே கால கட்டத்தில், 8.4% வளர்ச்சியாக இருந்தது. உற்பத்தி சுருங்கியதுதான் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சியடைந்தது மற்றும் இரண்டாவது காலாண்டு வளர்ச்சியானது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்புக்கு ஏற்ப இருந்தது. நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று மத்திய வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் ஆண்டு சில்லறை பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 6.77% ஆக குறைந்துள்ளது. ஆனால் இது 4% ஆக குறைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று சில் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் வரம்புகளை விட சற்று அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் அடுத்த ஆண்டுக்குள் பணவீக்கம் 2-6% வரம்புக்குள் குறையும் என்பதுதான். எங்களின் கணிப்புப்படி, அடுத்த நிதியாண்டில் இது 5.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று துருவ் சர்மா தெரிவித்துள்ளார்.
