தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து 5வது நாளாகக் இன்றும் சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.952 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து 5வது நாளாகக் இன்றும் சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.952 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.432 சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680 ஆகவும், சவரன், ரூ.37,440 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 54 குறைந்து ரூ.4,626ஆகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.168 சரிந்து, ரூ.37,008ஆக குறைந்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,626ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்துள்ளது. சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் எனத் தெரிகிறது. 

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் குறித்த எதிர்பார்ப்பு தங்கத்தின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கக்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும். அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது, தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து, ரூ.61.60ஆகவும், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.61,600 ஆகவும் விற்கப்படுகிறது