Asianet News TamilAsianet News Tamil

கடைசி வாய்ப்பு....இன்னும் 14 நாட்கள் மட்டுமே...!

the last chance for old currencies
the last-chance-for-old-currencies
Author
First Published Mar 17, 2017, 10:51 AM IST


கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, உயர் மதிப்பு கொண்ட  ரூபாய் நோட்டு செல்லாது என  பிரதமர்  மோடி அறிவித்தார் . பின்னர்  பல  கட்டுபாடுகளுடன்  கையில்  உள்ள பணத்தை  எல்லாம்  வங்கி கணக்கில்  செலுத்தபட்டது . ஆனால் அளவுக்கு மீறி  பணம்  வைத்துள்ளவர்கள்  அதாவது  கருப்பு பணம்  என  கூறப்படும்  கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்கள் இன்னமும்  , பழைய  ரூபாய் நோட்டுகளை ஆங்காங்கு வைத்துள்ளதாகவும்  செய்திகள்  வருகிறது .

இந்நிலையில்  இவர்களுக்கு  வாய்ப்பு  அளிக்கும்  விதமாக ,  பிரதான்  மந்திரி  கரீப் கல்யாண் யோஜனா திட்டம்  மத்திய  அரசால்  அறிமுகம் செய்யப்பட்டது . அதன்படி  வங்கி அல்லது  அஞ்சல் அலுவலகம்  அல்லது  வேறு  எதாவது  குறிப்பிட்ட   நிறுவனத்தில்  வைக்கப்பட்டுள்ள  கணக்கில்  காட்டப் படாத   பணம்  குறித்த  தகவலை இம்மாதம்  (மார்ச் 31) ஆம்  தேதிக்கும்  தெரிவிக்கலாம்.இல்லையென்றால் கடுமையான  அபராதமும்  தண்டனையும்   விதிக்கப்படும்  என்பது  குறிப்பிடத்தக்கது .

அவ்வாறு கணக்கில்  காட்டப்படாத  பணத்திற்கு 49.90% வரி, அபராத  தொகை  செலுத்த  நேரிடும் .

மேலும் ,25% தொகையை  கண்டிப்பாக டெபாசிட் செய்து ,  நான்கு  ஆண்டு கால  வடியில்லா இருப்பாக  வைக்க  வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது

வருமானத்தை எப்படி அறிவிக்கலாம் ?

http://incometaxindiaefiling.gov.in   என்ற  இணையத்தில்  கணக்கில்  காட்டப்படாத பணம்   குறித்த தகவலை   தாக்கல்  செய்யலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios