மோசடி நிறுவனகளை தண்டோரா போட்டு அம்பலம் ......செபி  அதிரடி ....!!!

மக்கள்  “முதலீடு” என்ற பெயரில், பல நிறுவனங்களை நம்பி முதலீடு செய்துள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில்  மேலும் பல பல  புதிய  நிறுவனங்களும் தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிறுவனங்கள்  மக்களிடமிருந்து  பல்லாயிரக்கணக்கான  ரூபாயை  முதலீடாக பெற்று, சரியான நேரத்தில் திருப்பி  கொடுக்காமால்,  காலம்   தாழ்த்தி வருகிறது.

இதனை  தடுக்கும் பொருட்டு, மக்களிடமிருந்து, முதலீடாக  பெற்ற அனைத்து பணத்தையும்  உரிய  நபருக்கு  சென்றடைய  வேண்டும் என்பதால்,  இது  போன்ற மோசடியில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் மீது இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு  வாரியமான  செபி நடவடிக்கை  எடுத்து வருகிறது.

அதன்படி, மோசடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதோடு, அந்த நிறுவனங்களுக்கு முன்பு தண்டோரா போட்டு அறிவிவிக்க செபி முடிவு செய்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சம்பந்தப்பட்ட மோசடி நிறுவன வாயிலில் சம்மன் அல்லது சொத்து பறிமுதல், விற்பனை அறிவிப்பு பற்றி நோட்டீஸ் ஒட்டப்படும் என்றும் மேலும்  நிறுவன வாயிலில் இதுகுறித்த தண்டோரா போட்டு அறிவிக்கப்பட உள்ளது எனவும் , மோசடி நிறுவனத்துக் கிளைகள் இருந்தால் அங்கும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்   செபி  திட்ட வட்டமாக  தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.