10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.⁠⁠⁠⁠

இரண்டு மாதங்களுக்கு முன்பு,  பழைய  ரூபாய் நோட்டுகள் செல்லாது  என பிரதமர் அறிவித்ததையடுத்து,  தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்  விடப்பட்டுள்ளன.  இந்நிலையில்,  பத்து ரூபாய்  நாணயங்கள்  கூட  செல்லாது  என    வதந்தி  பரவியது. 

 அதாவது  இருவகையான  1 ௦ ரூபாய்  நாணயங்கள்  இருகின்றது  அதில் எது  கள்ள நாணயம்  என புரியாமல் மக்கள்  ,அதனை  வாங்க  மறுத்தனர்.  இந்நிலையில்,  1 ௦  ரூபாய்  நாணயங்கள்  அனைத்தும் செல்லும் என  மத்திய  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த எந்த  வதந்தியையும் யாரும் நம்ப வேண்டாம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது