Asianet News TamilAsianet News Tamil

“ரெய்டில் மாட்டினால் அவ்ளோ தான் “உச்சகட்ட வரியுடன், அபராதம் “.....!!!

tax is-heavy-if-we-found-balck-money-in-raide
Author
First Published Dec 28, 2016, 6:01 PM IST


“ரெய்டில் மாட்டினால் அவ்ளோ தான் “உச்சகட்ட வரியுடன், அபராதம் “.....!!!

கருப்பு  பணம்  வைத்திருப்பவர்களை,  தற்போது  வருமானவரித்துறையினர்  சோதனையிட்டு வருகின்றனர்.அவ்வாறு ரெய்டு   வரும் போது,  அது கருப்பு  பணம்  என  நிரூபிக்கபட்டால் , 137.25 %(  60 சதவீத வரி, 60 சதவீத அபராதம், 15 சதவீத கூடுதல் கட்டணம்  வரி )  என , வருமானவரித்துறை  தெரிவித்துள்ளது.

அதன்படி,

ரெய்டு வரும் போது,   அந்த  பணம்  கணக்கில்  காட்டபடாமல் இருந்தால்,  அதற்குண்டான வரியை செலுத்திய வேண்டும் என்றும், அதே சமயத்தில்,  ஒரு வேளை , அந்த பணம்  கருப்பு பணம் தான் என  ஒப்புக்கொண்டாலும் , அதற்கு 107.25 சதவீதம் வசூலிக்கப்படும்  என  வருமானவரித்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

தற்போது மத்திய அரசு கருப்பு பணத்தை ஒப்படைக்க  கால அவகாம்  வழங்கியுள்ளது. அதன்படி,  டிசம்பர் 17  ஆம் தேதி முதல்  மார்ச்  31  ஆம்  தேதி வரை கால  அவகாசம் உள்ளதால் , கருப்பு  பணம்  வைத்திருப்பவர்கள் (பழைய  பணம்), தாமாகவே  முன்வந்து  ஒப்படைத்தால், 50 சதவீத  அபராதம்  மட்டுமே  விதிக்கப்படும் என்பது  குறிப்பிடத்தக்கது.

எனவே  கருப்பு பணம்  வைத்திருப்பவர்களுக்கு  இதுவே  கடைசி   வாய்ப்பு   என்பது  மேலும்  ஒரு கூடுதல்  தகவல் .  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios