tata neu: வால்மார்ட்டின் போன்பே, கூகுளின் கூகுள்பே, அமேசான் பே ஆகியவற்றுக்குப் போட்டியாக டாடா குழுமம் நியூ என்ற பெயரில் இன்று பேமெண்ட் செயலியை அறிமுகம் செய்கிறது.
வால்மார்ட்டின் போன்பே, கூகுளின் கூகுள்பே, அமேசான் பே ஆகியவற்றுக்குப் போட்டியாக டாடா குழுமம் நியூ என்ற பெயரில் இன்று பேமெண்ட் செயலியை அறிமுகம் செய்கிறது.
டாடா குழுமத்தின் ஊழியர்கள் மட்டும் தங்களின் மின்அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தற்போது இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இன்று இரவு 7 .30 மணி முதல் டாடாவின் நியூ செயலி செயல்படத் தொடங்கும்.

இன்று இரவு 7.30 மணிக்கு டாடா ஐபிஎல் டி20 போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக டாடா நியூ செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் ஏற்கெனவே வந்துவிட்டதால், அதை பதிவிறக்கம் செய்வோர் செய்யலாம், இரவு 7.30 மணி்க்கு மேல் செயலி செயல்பாட்டுக்குவரும்.
டாடாவின் நியூ செயலி, பல்வேறு சூப்பர் பரிசுகளை முதல்நாளான இன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது. இந்த செயலி மூலம் விமான டிக்கெட், ஹோட்டல் பில் கட்டணம், மருந்துகள் வாங்குதல், பலசரக்கு கடைக்கு பில் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்குகிறது
சீனாவின் வீ சாட், அலிபாபா ஆகிய செயலிகளைப் போல் சூப்பர் ஆப் மாடலில் டாடாவின் நியூ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நுகர்வோர் தொடர்பான வர்த்தகம், பொருட்கள், சேவைகளை வாங்குதல் என அனைத்தும்ஒரே செயலிக்குள் வந்துவிடும்.
அதாவது, பிக்பாஸ்கெட்டில் ஆன்-லைனில் பொருட்கள் வாங்குதல், 1எம்ஜி ஆன்லைன் ஃபார்மஸி, கிரோமா, விமான டிக்கெட் முன்பதிவு, டைட்டன், டானிஷ்க்கில் பொருட்கள்வாங்குதல், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த செயலியில் ஒருங்கே கிடைக்கும்.
தொலைப்பேசிக் கட்டணம், மின் கட்டணம், சமையல் சிலிண்டர் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இதில் இருக்கின்றன. புதிய காப்பீடு பெறுதல், காப்பீட்டுக்கு கட்டணம் செலுத்துதல், தனிநபர் கடன் ஆகியவையும் இதில் கிடைக்கும்.

டாடா நியூ செயலி இன்று அறிமுகமாகும் முதல் நாளில் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க பல்வேறு பரிசுகளையும், கேஷ்பேக்குகளையும் வழங்க இருக்கிறது.
டாடா நியூ செயலி மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்-லைன்பேங்கிங், ப்ரீபெய்ட் சேவைகள், யுபிஐ, டாடா பே, உள்ளிட்ட பல்வேறு விதமான பேமெண்ட் அம்சங்கள் உள்ளன.
இது தவிர பயனாளிகள் கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு ஸ்கேனிங் செய்து பில் செலுத்தும் க்யூஆர் கோட் வசதியும் இதில் உள்ளது.
மின் கட்டணம், டிடிஹெச் கட்டணம், பிராண்ட்பேன்ட்சேவைக்கான பில், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த செயலியில் உள்ளன.
