Tata Nexon new variants : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தி மைல்கல்லை கொண்டாடும் விதமாக நான்கு புது வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. நெக்சான் 3,00,000-ஆவது யூனிட் ரங்கூன் ஆலையியல் இருந்து வெளியிடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை - XZ+ (P), XZA+(P), XZ+(HS) மற்றும் XZA+(HS) என நான்கு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 11.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய டாடா நெக்சான் XZ+ (P) மற்றும் XZA+(P) வேரியண்ட்களின் விலை ரூ. 11.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவற்றின் இருக்கைகள் பென்கி கலிகோ ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. மேலும் முன்புறம் வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஏர் பியூரிஃபையர், ஆட்டோ டிம்மிங் IRVM-கள் உள்ளன.

டாடா நெக்சான் HS வேரியண்ட் விலை ரூ. 10.87 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதில் ஏர் பியூரிஃபையர் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே அம்சங்கள் டார்க் எடிஷன் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புது வேரியண்ட்கள் ராயல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. புதிய வேரியண்ட்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை விவரம்
- டாடா நெக்சான் XZ+ (P) ரூ. 11.59 லட்சம்
- டாடா நெக்சான் XZA+ (P) ரூ. 12.24 லட்சம்
- டாடா நெக்சான் XZ+ (HS) ரூ. 10.87 லட்சம்
- டாடா நெக்சான் XZA+ (HS) ரூ. 11.52 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
