Tata motors offers: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. அதிகபட்சமாக கார் மாடல்களுக்கு ரூ. 85 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் கார் மாடல்களுக்கு ஏற்ப சலுகை மற்றும் பலன்கள் வேறுபடும். இவை மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகைகள் டாடா ஹேரியர், சஃபாரி மற்றும் நெக்சான் போன்ற எஸ்.யு.வி. மாடல்கள், அல்ட்ரோஸ்மற்றும் டியாகோ போன்ற சப்-காம்பேக்ட் மாடல்கள், டிகோர் சப் காம்பேக்ட் செடான் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு சிறப்பு சலுகைகள் பொருந்தும். டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த டாடா பன்ச் மாடலுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

டாடாவின் ஐந்து பேர் பயணிக்கக்கூடிய எஸ்.யு.வி. மாடல் ஹேரியருக்கு அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. டாடா சஃபாரி மூன்று அடுக்கு எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்ககப்படுகின்றன. நெக்சான் EV மாடலுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
எஸ்.யு.வி. மாடல்களை தொடர்ந்து அல்ட்ரோஸ் மற்றும் டியாகோ ஹேட்ச்பேக் மாடல்களுக்கும் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி 2021 டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. 2021 டிகோர் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
