மீண்டும் சுங்க கட்டணம் உயருகிறது.. எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரனூர், வானகரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுங்க கட்டணம் உயரும் பட்சத்தில் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.