2026ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 10ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம், அதற்கான ஆதரவையும் வழங்குவோம் என்று தமிழக ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம்(டான்சிம்) தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜ ராமநாதன் தெரிவித்தார்.

2026ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 10ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம், அதற்கான ஆதரவையும் வழங்குவோம் என்று தமிழக ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம்(டான்சிம்) தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜ ராமநாதன் தெரிவித்தார்.

தமிழக ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம்(டான்சிம்) தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜ ராமநாதன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கவும், ஆதரவு வழங்கவும், தேவையான உதவிகளை செய்யவும் அமைக்கப்பட்டது டான்சிம். மாநிலத்தில் புதிய முதலீட்டை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு ஏற்றச் சூழலை உருவாக்கவும் புதிய ஸ்டார்ட்அப் கொள்கையை உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது. 

கடந்த ஓர் ஆண்டுக்குமுன்பே டான்சிம்மை உருவாக்கினோம். எங்கள் இலக்கு அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 10ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகும். இது எங்களில் நடுத்தரநோக்கு குறிக்கோள்.

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவாக 80 மையங்கள் இருக்கின்றன அதன் மீதும் கவனம் செலுத்துவோம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் சந்தைகளையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்வகையில் ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக தனியாக ஸ்டார்ட் அப் நெட்வொர் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன, நிதியுதவி ஆகியவை கணக்கில் எடுக்கப்படும்

தொழில்முனைவோர்களை கல்லூரிக் காலத்திலிருந்தே உருவாக்க பயிற்சியும், ஊக்கமும் அளி்க்கப்படும். சென்னை மற்றும் கோவை தவிர்த்து பல மாவட்டங்களில் இருந்தும் புதிய தொழில்முனைவோர்கள் உருவாக பயிற்சியும், நிதியுதவியும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தின் பட்ஜெட் தாக்கலின்போது நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அறிவிப்பில், ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் ஸ்டார் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்காக சூழல் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

டான்சிம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.30கோடி ஒதுக்கவும், பட்டியலின மற்றும் பழங்குடியின சார்பில் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகவும் சூழல் உருவாக்கப்படும். தமிழகத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கும், நிதியுதவிக்காகவும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

தமிழக அரசின் தொழில்மேம்பாட்டுக் கழகம்(டிட்டோ) மூலம் சென்னையில் ரூ.75 கோடியில் ஸ்டார்ட் அப் முனையம் உருவாக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மாநிலம் என்று எடுத்துக்கொண்டால், முதல் 3 இடங்களில்தமிழகமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகஇருக்கிறது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிந்தனைகள், முதலீடு, நிதி கோருதல் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
இவ்வாறு ராமநாதன் தெரிவித்தார்