கொரோனா 2வது அலையிலிருந்து தமிழகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வந்திருக்கிறது என்பது புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா 2வது அலையிலிருந்து தமிழகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வந்திருக்கிறது என்பது புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டு முடிவில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் கொரோனாவுக்கு முந்தைய காலத்தின் வருவாயை முந்திவிட்டது. தமிழகத்தில் பொருளதார செயல்பாடுகள் சூடுபிடித்துள்ளன, வரிவருவாய் உயர்ந்துள்ளது, மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் பங்கீடும் அதிகரித்துள்ளது சான்றாகும்.

கணக்குத் தணிக்கை அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில், “ தமிழகத்தின் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டு வருவாய் வரவுகள் பட்ஜெட் இலக்கில் 66 சதவீதம் அல்லது, ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 873 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டோடு ஒப்பிடுகையில் பட்ஜெட் இலக்கில் 65% மாகவும், அப்போது ரூ.1,23,129 கோடிதான் வருவாய் வரவுகள் இருந்தன

2021- நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாநில வருவாய் வரவு ரூ1,12,938 கோடியாகவும், பட்ஜெட்இலக்கில் 52 சதவீதமாகத்தான் இருந்தது.வருவாய் வரவுகளில் வரிவருமானம் என்பது பட்ஜெட் இலக்கில் 67 சதவீதமாக அதாவது ரூ.1,03,516 கோடியக இருந்தது. இது 2020 நிதியாண்டில் பட்ஜெட் இலக்கில் 65 சதவீதம் அதாவது ரூ97,761 ஆக இருந்தது.

பட்ஜட் இலக்கில் தமிழகத்தின் மாநில ஜிஎஸ்டி வரிவசூல் 73% அல்லது ரூ.30,946 கோடியாகவும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் 76% அல்லது ரூ.10,086 கோடியாகவும் இருக்கிறது.இது கடந்த நிதியாண்டில் மாநில ஜிஎஸ்டி 59%, முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் 62% ஆக இருந்தது.

கிரேட்லேக்ஸ் இன்ஸ்டியூட்ஆப் மேனேஜ்மென்ட்டின் பொருளதாரப் பேராசிரியர் வித்யா பாம்பரே கூறுகையில் “ தமிழகத்தின் பொருளாதாரம் ஏற்றுமதி, இறக்குமதிக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகமான இறக்குமதி காரணமாகவே மாநில அரசுக்கு அதிகமான ஜிஎஸ்டி வரி கிடைக்கிறது. ரியல்எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்ததால்தான் முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்

டாக்டர் பிஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் யுனிவர்சிட்டியின் துணைவேந்தர் எனஆர் பாணுமூர்த்தி கூறுகையில் “ மத்திய அரசுக்கு ஜிஎஸ்டிவரி அபரிதமாகக் கிடைக்கும்போது, அதன்மூலம் மாநிலஅ ரசுகளுக்கும் பங்கீடு அளவு அதிகரிக்கும். பொருளாதாரம்மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவதால்தான் மத்தியஅரசுக்கு ஜிஎஸ்டி வரிவசூல் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது, 2022, ஜனவரியில் ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

மத்திய அரசு மாநிலத்தின் பங்கை மட்டும் பகிர்வது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் ஜிஎஸ்டி வசூலையும் பகிர்ந்து கொண்டது, இதனால் மாநில அரசுகள் தங்கள் செலவினங்களை அதற்கேற்ப திட்டமிடலாம். உண்மையில், இது தற்போதைய வரியை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், எதிர்கால வரியிலும் சிறிது சிறிதளவு உள்ளது, இது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.” எனத் தெரிவித்தார்

தமிழக அரசின் விற்பனைவரி, வர்த்தக வரி ரூ.34,205 கோடியாகவும், மாநில சுங்கவரி ரூ.5,176 கோடியாகவும், இதரவரிகள் கட்டணங்கள் ரூ.4,042 கோடியாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் கொரோனாவுக்கு முந்தைய காலத்தை நெருங்கிவிட்டதைக் காண்பிக்கின்றன.
வரிஅல்லாத வருவாய் ரூ.6,225 கோடியாக பட்ஜெட் இலக்கில் 44% ஆக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையி்ல் 58% அல்லது ரூ.7791கோடியாக இருந்தது.

வருவாய் செலவின் குறைந்துள்ளது

தமிழகத்துக்கு வரிவருவாய் அதிகரித்தது மட்டுமல்ல, வருவாய் செலவினமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நடப்புநிதியாண்டின் 3வது காலாண்டில் பட்ஜெட் இலக்கில் 57%அல்லது ரூ.1,52,269 கோடியாகும். இது கடந்த ஆண்டு 3-வது கலாண்டில் பட்ஜெட் இலக்கில் 68% மாகஇருந்தது. 

பொருளாதார வல்லுநர்கள் பாணுமூர்த்தி, மாம்பரே இருவரின் கருத்தப்படி, “ தமிழக அரசு நடப்பு நிதியாண்டின் கடைசிக் காலாண்டுக்கு செலவினங்களை ஒத்திவைப்பதால், வருவாய் செலவினம் குறைந்துள்ளது. ஆனால், கடைசி காலாண்டில் கடனுக்கான வட்டி செலுத்தும்போது வருவாய் செலவினம் அதிகரிக்கும். தமிழக அரசு முதலீட்டுச் செலவும் அதிகரித்துள்ளது. 3-வது காலாண்டின்படி, பட்ஜெட் இலக்கில் முதலீட்டுச் செலவு ரூ.25,227 கோடியாகும் அதாவது பட்ஜெட் இலக்கில் 57%மாகும். கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் ரூ.13,903 கோடி அதிகமாகும்” எனத் தெரிவித்தனர்