Supertech: நொய்டாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சூப்பர்டெக், கடனைத் திருப்பிச் செலுத்தாததையடுத்து, அதை திவாலானதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் டெல்லி கிளையில் இன்று நோட்டீஸ் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அளித்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நொய்டாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சூப்பர்டெக், கடனைத் திருப்பிச் செலுத்தாததையடுத்து, அதை திவாலானதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் டெல்லி கிளையில் இன்று நோட்டீஸ் யூனியன் பேங்க் ஆப் இந்தியா அளித்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திவால் நோட்டீஸ்
இந்த சூப்பர்டெக் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நகரங்களில் ஏராளமான கட்டுமானத் திட்டங்கள், அடுக்குமாடி வீடுகள் என பல திட்டங்கள் கிடப்பில் இருக்கும்போது திவால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு செலுத்த வேண்டியநிலுவை தொகை கிடப்பில் இருப்பதால், அதை கேட்டு வங்கிகள் நெருக்கியதையடுத்து, சூப்பர்டெக் நிறுவனம் மீது திவால் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திவால் நோட்டீஸ் குறித்து தீர்வு காண்பதற்காக ஹித்தேஷ் கோயல் என்பதை தேசிய கம்பெனி சட்டம் தீர்ப்பாயம் இன்று நியமித்துள்ளது.
போராடுவோம்
கிரேட்டர் நொய்டா-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் சூப்பர்டெக் நிறுவனம் கட்டியிருந்த இரு மிகப்பெரியகட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது திவால்நோட்டீஸ் அளித்துள்ளது சூப்பர்டெக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இடியாகும்
ஆனாலும், தேசிய கம்பெனிசட்ட தீர்ப்பாயத்தில் சென்று திவால் நோட்டீஸுக்கு எதிராகப் போராடுவோம் என சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு வராது
இந்த திவால் நோட்டீஸால் தாங்கள் செயல்படுத்திவரும் எந்தக் கட்டுமானத் திட்டமும் நிறுத்தப்படாது. கடந்த 7 ஆண்டுகளில் 40ஆயிரம் பிளாட்டுகளை வழங்கியிருக்கிறோம். நாங்கள் உறுதியளித்ததுபோல் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் வீடுகளை வழங்குவோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 7ஆயிரம் வீடுகளை வழங்கும் உறுதியளிப்பை நிறைவேற்றுவோம் என சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், எத்தனைபேர் சூப்பர் டெக் நிறுவனத்தில் பணம்செலுத்தி வீட்டுக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை.
25ஆயிரம் பேர் கதி என்ன
தற்போது சூப்பர்டெக் நிறுவனத்தின் கட்டுமானத்திட்டங்கள், நொய்டா கிரேட்டர் நொய்டா, மீரட், மொராதாபாத், குர்கோவன், ருத்ராபூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. ஆனால், நிறுவனத்துக்கு நெருங்கியவர்கள் கூறுகையில் ஏறக்குறைய 25ஆயிரம் பேர் வீட்டுக்கு பணம் கொடுத்து தற்போது சிக்கிக்கொண்டதாகவும் அவர்களின் எதிர்காலம் என்னஆகப்போகிறது என்பதும் தெரியவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள்.
