Asianet News TamilAsianet News Tamil

Share Market Today: பங்குச்சந்தையில் மந்தமான போக்கு ! சென்செக்ஸ், நிப்டி சுணக்கம்: PSU வங்கி பங்கு லாபம்!

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை நேற்று வரலாற்று உச்சத்துடன் முடிந்த நிலையில் இன்று காலை சுணக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

Stock Market Today: Sensex and Nifty50 fall: PSU bank focus
Author
First Published Nov 25, 2022, 9:52 AM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை நேற்று வரலாற்று உச்சத்துடன் முடிந்த நிலையில் இன்று காலை சுணக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் குறைந்து, 62,152 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 28 புள்ளிகள் சரிந்து, 18,456 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

Stock Market Today: Sensex and Nifty50 fall: PSU bank focus

ஏற்றத்தை தக்கவைத்த பங்குச்சந்தை: ஊசலாட்டத்திலும் சென்செக்ஸ் உயர்வு: வங்கி,உலோக பங்கு லாபம்

நிப்டியில் பெரும்பாலான துறைகள் மந்தமாக செயல்பட்டுவரும் நிலையில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன, காலை  வர்த்தகம் தொடங்கியது முதல் பிஎஸ்பி பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடன் செல்கின்றன.

உற்சாகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: டாடா பங்குகள் லாபம்!காரணம் என்ன?

Stock Market Today: Sensex and Nifty50 fall: PSU bank focus

அமெரி்க்கப் பங்குச்சந்தை நேற்று தேங்க்ஸ்கிவிங் நாள் என்பதால் விடுமுறை விடப்ட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் பெடரல்ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்துவதில் தீவரம்காட்டாது என்ற அறிவிப்பால் அமெரிக்கச்சந்தை உயர்வுடன் முடிந்தது. அதன் எதிரொலி இந்தியச் சந்தையிலும், ஆசியச் சந்தையிலும் காணப்பட்டது. ஆனால், இன்று அமெரிக்கப் பங்குச்சந்தை எவ்வாறு இருக்கும் என்பது முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை.

இதனால் முதலீட்டாளர்கள் எந்த பங்குகளிலும் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பதால், காலை முதலே மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சுணக்கமாகவும், மந்தமாகவும் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் உயர்வுடனும், 18 நிறுவனப் பங்குகள் சரிவுடன் உள்ளன. லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ்வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி, பார்தி ஏர்டெல், டாடாஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, ரிலையன்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள் லாபத்தில் உள்ளன.

Stock Market Today: Sensex and Nifty50 fall: PSU bank focus

வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! 62ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்! நிப்டி உச்சம்

நிப்டியில், வங்கித்துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார்வங்கிகள், ஊகடத்துறை ஆகிய பங்குகள் அதிக லாபத்துக்கு கைமாறுகின்ற. இந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம்செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக பொதுத்துறை வங்கிப் பங்குகள் 1.77 சதவீதம் லாபத்தோடு காலை முதல் வர்த்தகம் நடக்கிறது. எப்எம்சிஜி துறை பங்குகள் இழப்பில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios