ssy ppf nps :சுகன்யா சம்ரிதி சேமிப்பு(செல்வமகள் சேமிப்பு), பிபிஎப், என்பிஎஸ் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், நடப்பு நிதியாண்டுக்கான குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யாவிட்டால் காலாவதியாகிவிடும்
சுகன்யா சம்ரிதி சேமிப்பு(செல்வமகள் சேமிப்பு), பிபிஎப், என்பிஎஸ் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், நடப்பு நிதியாண்டுக்கான குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யாவிட்டால் காலாவதியாகிவிடும்.
அதாவது 2021-22ம் நிதியாண்டுக்குள் ஒருமுறையாவது இந்த 3 சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பணம் டெபாசிட் செய்திருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் கடைசித்தேதி நாளையாகும். நாளைக்குள் குறைந்தபட்ச டெபாசிட் செய்து கணக்கை புதுப்பிக்க தவறினால், கணக்கு காலாவதியாகிவிடும்.

இந்த 3 சேமிப்புக் கணக்குகளையும் புதுப்பிக்க குறைந்தபட்ச டெபாசிட் தொகை மாறுபடும். அந்த தொகையாவது நாளைக்குள் செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைத்திருப்பது அவசியம்
செல்வ மகள் சேமிப்பு
பெண் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா. இதில் பெண்குழந்தைகளுக்காக மாதந்தோறும் சேமிப்பவர்கள், இந்த நிதியாண்டில் எந்தவிதமான டெபாசிட்டும் செய்யாமல் இருந்தால், நாளைக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்து கணக்கை உயிர்ப்புடன் வைக்க வேண்டும். இந்த திட்டத்தில் சேமிப்படும் பணத்துக்கு அதிபட்சமாக 7.60 சதவீதம் வட்டி தரப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்

பிபிஎஃப்
2021-22ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் பிபிஎப் திட்டத்துக்கு வட்டி 7.10 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் எந்தவிதான டெபாசிட்டும் செய்யாதவர்கள் நாளைக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்தி கணக்கை புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்கு காலாவதியாகிவிடும்
என்பிஎப்

மூத்த குடிமக்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் எந்த முதலீடும் செய்யாதவர்கள் நாளைக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்த வேண்டும். இந்த கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்க ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டியது அவசியமாகும். நாளைக்குள் டெபாசிட் செய்யத் தவறினால், கணக்கு காலாவதியாகிவிடும்.
