sri lanka crisis: டீ ரூ.100,பால்பவுடர் ரூ.250: நசுங்கும் இலங்கைப் பொருளதாரம்: பணமில்லாததால் தேர்வு ரத்து
sri lanka crisis: ஒரு டீ 100 ரூபாய், 400 கிராம் கொண்ட பால்பவுடர் ரூ250, பேப்பர் வாங்க அரசிடம் பணம் இல்லாததால் பள்ளி தேர்வுகள் ரத்து என இலங்கைப் பொருளாதாரம் அழிவை நோக்கி நகர்கிறது.
ஒரு டீ 100 ரூபாய், 400 கிராம் கொண்ட பால்பவுடர் ரூ250, பேப்பர் வாங்க அரசிடம் பணம் இல்லாததால் பள்ளி தேர்வுகள் ரத்து என இலங்கைப் பொருளாதாரம் அழிவை நோக்கி நகர்கிறது.
நீண்ட வரிசை
பெட்ரோல், சமையல் கேஸ், மண்ணெய், டீசல் ஆகியவற்றின் விலை விண்ணைமுட்டும் வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர். மண்ணெய், பெட்ரோல் வாங்க நேற்று மக்கள் நீண்ட வரிசையில் பலமணிநேரம் பல்வேறு நகரங்களில் காத்திருந்தனர். இதில் வரிசையில் காத்திருந்த இருவர் கடும் வெயில் தாங்க முடியாமல், சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இயற்கை விவசாயம்
இலங்கைப் பொருளாதாரம் மிகவும் மோசான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. அரசின் அன்னியச் செலாவணி குறைந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் உள்நாட்டு மக்களை பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுமாறு இலங்கை அரசு கட்டாயப்படுத்தியது.
வேறுவழியின்றி இலங்கை விவசாயிகளும் பாரம்பரிய, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தனர். இதனால் இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு, தானியங்கள்,அரிசி, பருப்பு விலையும் உயரத்தொடங்கியது.
பொருளாதாரம் நசிவு
நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, கடந்த பிப்ரவரி மாதம் 2310 கோடி அன்னியச் செலாவணி மட்டுமேகையிருப்பு இருந்தது. அமெரிக்கடாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பும் 275 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது.
ஆசியாவிலேயே அதிக பணவீக்கம்
கடந்த மாதம் இலங்கையின் பணவீகக்ம் 15.1% அதிகரித்து. ஆசியாவிலேயே மிக அதிகபட்சமான பணவீக்கத்தைஇலங்கை எதிர்கொண்டு வருகிறது. உணவுப்பணவீக்கம் 25% அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது
ஒரு டீ 100 ரூபாய்
இலங்கையில் 400 கிராம் கொண்ட பால்பவுடர் விலை 250 ரூபாயாக அதிகரித்துவிட்டதால், ஒரு கிளாஸ் டீ விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இலங்கை மக்களில் பெரும்பகுதியினர் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை நிறுத்தி பலமாதங்கள்ஆகிவிட்டன. அந்த அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது.ச மையல் கேஸ் பயன்படுத்திய மக்கள், மண்எண்ணெய்க்கும், மண் எண்ணெய் அடுப்பைப் பயன்படுத்திய மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டனர்.
இருவர் உயிரிழப்பு
இலங்கையில் மிகப்பெரிய சமையல் கேஸ் நிறுவனமான லாக்ப் நேற்று 12.50 எடைகொண்ட சிலிண்டர் விலையை 1,359 ரூபாய் உயர்த்தியது. இதனால் மக்கள் ஒவ்வொரு நாளைக் கழிக்கவும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். நிலக்கரி வாங்க முடியாததால், மின்சாரத் தட்டுப்பாடும் ஏற்பட்டு, பல்வேறு நகரங்களில் மணிக்கணக்கில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு இருந்தபோதிலும் அதை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குக்குகளில் நாள்தோறும் நீண்டவரிசையில் மக்கள் காத்துக்கிடப்பதை காண முடிகிறது. பெட்ரோல் பங்குக்குளில் நேற்று மண்எண்ணெய்வாங்குவதற்காக நேற்று இருவர் நின்றிருந்தபோது, வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தனர்
இருப்பு தீர்ந்தது
பெட்ரோலி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் ராணாவலா கூறுகையில் “ கச்சா எண்ணெய் இருப்பு ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டும்தான் இருந்தது. அங்கும் அனைத்தும் தீர்ந்துவிட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
அரசிடம் காசில்லை
இலங்கை முழுவதும் இன்று பள்ளிக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்களுக்கு கேள்வித்தாள் அச்சடிக்க முடியாமலும், தேர்வு எழுதும் பேப்பர் இல்லாததாலும் தேர்வுகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந் 1948-ம் ஆண்டுக்குப்பின் இலங்கை மிக மிக மோசமான சூழலைச் சந்தித்து வருகிறது
- sri lanka
- sri lanka crisis
- sri lanka currency to inr
- sri lanka economic crisis
- sri lanka financial crisis
- sri lanka news
- srilanka economic crisis
- usd to sri lankan rupee
- sri lanka population
- sri lanka currency
- இலங்கை
- இலங்கைப் பொருளாதாரம்
- இலங்கை பொருளாதாரச் சிக்கல்
- இலங்கை பணவீக்கம்
- இலங்கை விலைவாசிஉயர்வு
- இலங்கையில் பெட்ரோல் விலை