sri lanka crisis: பொருளாதார நெருக்கடி: 40ஆயிரம் லிட்டர் டீசலுடன் இந்தியக் கப்பல் இலங்கை சென்றது
sri lanka crisis: மிகமோசமான கடன் நெருக்கடி, பொருளாதாரப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 40ஆயிரம் லிட்டம் டீசலுடன் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சரக்குக் கப்பல் இலங்கை சென்று சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகமோசமான கடன் நெருக்கடி, பொருளாதாரப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 40ஆயிரம் லிட்டம் டீசலுடன் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சரக்குக் கப்பல் இலங்கை சென்று சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்று மாலை முதல் டீசல் வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடன் அதிகமானதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 கோடி டாலருக்கும் குறைந்துவிட்டதால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள்,உணவுப் பொருட்கள், பெட்ரோல் , டீசல் போன்றவை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும்.
ஆனால், இறக்குமதிக்கு அரசிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு இல்லாததால், உணவுப் பொருட்களின்விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடம் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. மேலும் சர்வதேச நிதியத்திடமும் கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது.
இருளில் மக்கள்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து இலங்கையில் பெரும்பகுதி முடங்கிவிட்டது. அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இலங்கையில் முக்கியமான மின்நிலையங்கள் டீசல் எரிபொருளில்தான் மின்உற்பத்தி செய்கின்றன. தற்போது டீசலும் இல்லாததால், இலங்கையில் நாள்தோறும் 13 மணிநேரம் மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீ்ட்டிலியே இருக்குமாறு கேட்டுக்கொண்டன.
மக்கள் போராட்டம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் நேற்று இரவு கொழும்பு நகரில் உள்ள மரிஹயா பகுதியில் இருக்கும், அதிபர் கோத்தபய ராஜபக்சஇல்லத்தின்முன் போராட்டம் நடத்தினர். பொருளாதாரநெருக்கடியை தடுக்கத் தவறியதாகக் கூறியும், பதவிவிலகக் கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை விரட்ட போலீஸார் முயன்ற நடத்தப்பட்ட தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர். 5 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸார் கைதுச செய்தனர். இந்த போராட்டத்தில் ஒரு பேருந்து ஜீப் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன.
அவசரநிலை
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், விலைவாசி உயர்வால் உணவுப் பொருட்களை வாங்கமுடியாமல் மக்கள் கண்ணீர்விட்டு வரும் நிலையில் நாட்டில் அவசரநிலைப் பிரகடனத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார்.
டீசல்,அரிசி
இந்நிலையில் இந்தியாவிடம் 100 கோடி டாலர் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதையடுத்து, இருளில் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்காக 40ஆயிரம் லிட்டர் டீசலுடன் இந்தியா சார்பில் சரக்கு கப்பல்இலங்கை சென்றடைந்துள்ளது. இந்த கப்பலில் இருந்து டீசல் எடுக்கப்பட்டு இன்று மாலை முதல் வினியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது.
இலங்கையில் அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், முதல் கட்டமாக அரிசியை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதாக செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.