sri lanka crisis : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல் கவலையளிக்கிறது. இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்தியாவுக்கும் அதே கதிதான ஏற்படும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல் கவலையளிக்கிறது. இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்தியாவுக்கும் அதே கதிதான ஏற்படும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.

இலங்கை சூழல்

இலங்கையில் மிக மோசமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி பற்றாக்குறையால் வெளிநாடுகளில் இருந்கு இறக்குமதி செய்ய முடியாமல் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள்,விலை எகிறியுள்ளது. இதனால் இந்தியாவிடம் கடன் கோரியுள்ளது இலங்கை அரசு.

இலங்கையில் விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டதையடுத்து, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு வீதிகளில் போராடி வருகிறார்கள். இதனால் அவசரநிலையை அரசு கொண்டுவந்துள்ளது.

அமைச்சர்கள் ராஜினாமா

இலங்கை அமைச்சரவையில் நேற்றுஒரேநாளில் 26 அமைச்சர்கள் பதவி விலகினனர், புதிதாக 4 அமைச்சர்களை இடைக்காலாக அதிபர் ராஜபக்ச நியமித்தார். ஆனால் நிதிஅமைச்சர் 24மணிநேரத்துக்குள் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

இலங்கையின் பொருளாதாரச் சூழல் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. மக்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்து வருகிறது. இ்லங்கையில் பணவீக்கம் 25 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துவிட்டது. 

இந்தியாவுக்கும் வரலாம்

இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இலங்கையின் பொருளாதாரநெருக்கடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் “ இலங்கையின் பொருளதார சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது. இந்தியாவும் இலங்கையின் பாதையில்தான் பயணிக்கிறது. பணவீக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும், இல்லாவிட்டால், நம்முடைய சூழல் இலங்கையைவிட மோசமாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன்

இந்தியாவில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பிரதமர் மோடி பேச வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளது இந்த நேரத்துக்கு அவசியமானதுதான். அனைவரும் அமர்ந்து நாட்டின் நலனுக்காக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

திசைதிருப்புகிறது

நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. மத்தியஅரசுக்கு தேர்தல், அரசியல் தவிர எதைப்பற்றியும் கவலையில்லை. உ.பி. தேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், ஆளும் கட்சித் தரப்பில் யாரும் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை. 

மாநிலங்களவையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விவாதம் நேற்று முடிந்துவிட்டது. ஆனால், அரசு தரப்பிலிருந்து வெளிப்படையாக யாரும் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்பட்டு பேசவில்லை. நாம் என்ன செய்ய முடியும். தேர்தல், அரசியல் தவிர்த்து அரசு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை

விலைவாசி உயர்வு

பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்துப் பேசினால் மத்திய அ ரசு அதை திசை திருப்பிவிடுகிறது. பணவீக்கம் பற்றி நாங்கள் பேசினால் ஹிஜாப், ஹலால் விவகாரம் குறித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் பேசுகிறார்கள். எப்போது இந்த விவாதம் நடக்கப்போகிறது எனப் பார்ப்போம். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார் கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதுவரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.20 உயர்ந்துள்ளது.