மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆரம்பத்திலிருந்தே பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, ரொக்க பண பரிவர்த்தனையை குறைக்கும் பொருட்டு , ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டஜிட்டல் பரிவர்த்தனை :
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர, அதாவது பணமில்லாத பொருளாதாரத்தை மேம்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான நிபுணர் க குழு அமைக்கப்பட்டது.
ஆய்வு :
இந்த குழு மேற்கொண்ட ஆய்வின் படி, 50 ஆயிரத்திற்கும் மேலான, ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டால் , ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாய் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் வாங்க 1000 ரூபாய் சலுகை :
ஆன்லைன் வழியாக மேற்கொள்ளும், பண பரிவர்த்தனைக்கு சில சலுகைகள் வழங்கவும் , ஸ்மார்ட்ஃபோன் வாங்க விரும்புவோருக்கு, ரூ.ஆயிரம் வரை விலைச் சலுகை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகை :
மைக்ரோ ஏடிஎம் மையங்கள், பயோமெட்ரிக் சோதனை இயந் திரங்களுக்கு ஊக்கத்தொகைகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் வங்கியாளர்கள் அனைத்து கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும். நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் ஆதார் இணைப்பிலான மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களுடன் இணைக்கபட வேண்டும் என்றும், அனைத்து வர்த்தகர்களுக்கும் பயோ மெட்ரிக் சென்சார் 50 சதவீத தள்ளுபடியில் அளிக்க வேண்டும். இதன் மூலம் பரிவர்த்தனையை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சந்திரபாபு நாயுடு பிரதமர் சந்திப்பு :
ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு , குழு நிபுணர்களுடன் பிரதமரை சந்தித்து , இதற்கான திட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை , மத்திய நிதியமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கும் துறைகள் :
இதன் விளைவாக , ரியல் எஸ்டேட், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
