ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது ஸ்மார்ட் ரேஷன் கார்டு……!!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஆதார் அட்டை அவசியம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் காமராஜ் மேலும் பல கருத்துக்களை முன்வைத்தார். அதன்படி,. ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் , இதுவரை 80 சதவீத மக்கள், ஆதார் எண்ணை, ரேஷன் அட்டையுடன் இணைத்து விட்டதாகவும், மீத்யமுள்ள 2௦ சதவீத மக்கள் தற்போது ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைத்து வருவதா கவும் குறிபிட்டார் .

போலி ரேஷன் கார்டு

5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் இதுவரை ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறிய அவர், 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்