இந்தியர்களுக்கு அட்டகாச சலுகை .!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி !!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரபல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோருக்கு சிறப்பு சலுகைக் கட்டணங்களை அறிவித்துள்ளது.

அதாவது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் ஆகியவை சார்பாக, மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஆமதாபாத், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், கோவை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து விமானச் சேவைகள் மேற்கொள்கிறது.

சிறப்பு சலுகைகள் :

லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் செல்லும் இந்தியர்களுக்கு, எகனாமிக் பிரிவு கட்டணம் ரூ.68,000 வசூலிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, ரிட்டர்ன் டிக்கெட் பதிவு செய்வோருக்கு, ரூ.1,08,000 முதல் ரூ.1,91,000 வரை பிரிமீயம் எகனாமிக் மற்றும் பிசினஸ் பிரிவுகளில் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :

இந்த சலுகை நவம்பர் 30 ம் தேதி தொடங்கி, 2017 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.