Income Tax Free State | இந்த மாநிலத்தவர் மட்டும் வருமான வரி செலுத்த தேவையில்லை! ஏன் தெரியுமா?
Income Tax ITR Filing | நம் நாட்டில் குறிப்பட்ட வருமானத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், ஒரே ஒரு மாநிலத்தவர்கள் மட்டும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். கடந்த 2023-2024 நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நாளையுடன் (ஜூலை 31) தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், காலம் தாழ்த்தி வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.5000 அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட வருமானத்திற்கு அதிகமாக சம்பளம் வாங்குவோர், இன்கம்டேக்ஸ் தாக்கல் செய்வதை வருமான வரிச் சட்டம் 1961 கட்டாயமாக்குகிறது. அதேவேளையில், ஒரே ஒரு மாநிலத்தவர் மட்டும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்ற விலக்கும் உள்ளது. இது எந்த மாநிலம் என்று தெரியுமா? இம்மாநில மக்கள் கோடிகோடியாக சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தத்தேவையில்லை. அது சிக்கிம் மாநிலம் தான்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மட்டும் தான், வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம்.
இந்திய அரசியலமைப்புப் பிரிவு 372 (F)-ன் படி, சிக்கிம் மாநில மக்கள் வரிவிதிப்பு வரம்பிற்கு வெளியே வகைபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ஒரு படத்திற்கு 25 கோடி வாங்கினாலும் அந்த சந்தோசம் கிடைக்கல! முதல் சம்பளம் குறித்து பேசிய நானி!
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த கதை!
1975ம் ஆண்டு தான் இந்தியாவுடன் சிக்கிம் மாநிலம் இணைந்தது. அப்போது, சிக்கிம் மாநிலம் அதன் பழைய சட்டதிட்டங்களையும், சிறப்பு அந்தஸ்தையும் அப்படியே பின்பற்றும் என நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைந்தது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தின் பூர்வகுடி மக்கள் வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 10 (26AAA)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். அரசியலமைப்பு 371 F பிரிவின் கீழ் சிக்கிம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது
பழைய மற்றும் புதிய வரி முறை.. ரூ. 8 லட்சத்துக்கு மேல் சம்பளம் மற்றும் அதற்கு மேல்? என்ன செய்யலாம்?