Asianet News TamilAsianet News Tamil

Air India Vistara Merger: ஏர் இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைகின்றன: டாடா சன்ஸ் அறிவிப்பு

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானநிறுவனங்களை இணைக்க இருப்பதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(எஸ்ஐஏ) மற்றும் டாடா சன்ஸ் குழுமம் அறிவித்துள்ளன.

SIA and Tatas have announced plans to combine Vistara
Author
First Published Nov 30, 2022, 1:56 PM IST

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானநிறுவனங்களை இணைக்க இருப்பதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்(எஸ்ஐஏ) மற்றும் டாடா சன்ஸ் குழுமம் அறிவித்துள்ளன. 

இதன் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீதம் பங்குகளும், ரூ.2,058 கோடி முதலீடும் ஏர் இந்தியாவுக்கு கிடைக்கும். 

SIA and Tatas have announced plans to combine Vistara

ஏர் இந்தியா குழுமத்துடன், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர்ஏசியாஇந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என அனைத்தும் இணைக்கும் பணிகளும் 2024, மார்ச் மாதத்தில் முடிந்துவிடும் என்று டாடா சன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனங்களை இணைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இதற்கு 12 மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏர் இந்தியா, விஸ்தாரா நிறுவனங்கள் இணைந்தால், இந்தியாவில் 2வது மிகப்பெரிய உள்நாட்டு விமானநிறுவனமாக மாறும். 

என்டிடிவி இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகல்

விஸ்தாரா நிறுவனத்தில் சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஏர் இந்தியாவுடன் இணையும்போது 25.1 சதவீதம் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு கிடைக்கும். மேலும், கூடுதலாக ரூ.2,058 கோடியும் ஏர் இந்தியாவில் முதலீடு செய்யஉ ள்ளது.

SIA and Tatas have announced plans to combine Vistara

PTR Palanivel Rajan: சபாஷ் !தமிழக அரசின் நிகரக் கடன் 30 சதவீதம் குறைந்தது!வருமானம் உயர்கிறது

டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகர் கூறுகையில் “ விஸ்தாரா, ஏர் இந்தியா இணைவு என்பது முக்கியமான மைல்கல். ஏர் இந்தியாவை மறுகட்டமைக்கும், உலகத் தரத்துக்கு விமானநிறுவனத்தை உருவாக்கும். ஏர் இந்தியா குறிப்பாக நெட்வொர்க் மற்றும் சேவைவிரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். பாதுகாப்பு, நம்பிக்கை, சிறந்த செயல்பாடு நோக்கமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios