தேசியக் கொடியை அவமதித்த காரணத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவுக்குள் நுழைய எந்த அதிகாரிகளுக்கும் விசா வழங்கப்படாது, ரத்து செய்யப்படும் என்று அமேசான் நிறுவனத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கால்மிதியடி

கனடாவில் செயல்படும் அமேசான் நிறுவனம் அங்கு இணையதளத்தில் இந்தியாவின் தேசியக் கொடி பதித்த கால்மிதியடிகளை விற்பனைக்கு விளம்பரம் செய்து இருந்தது. இதைப் பார்த்த கனடாவில் வாழும் இந்தியர் அடுல் போபே என்பவர் மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குடுவிட்டரில் தகவல் அனுப்பினார்

.

அதில், அமேசான் கனடா நிறுவனம் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் கால்மதியடிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அந்த நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தார்.

மன்னிப்பு கோருங்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதில் அனுப்பினார். அப்போது அவர் டுவிட்டரில் வௌியிட்ட செய்தியில், “ அமேசான் நிறுவனம் இந்திய தேசியக் கொடி படம் பதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் உடனடியாக சந்தையில் இருந்து வாபஸ் பெற வேண்டும். எங்கள் நாட்டுக் கொடியை அவமதிப்பு செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

விசா ரத்து

இதை அமேசான் நிறுவனம் செய்யாவிட்டால், அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளுக்கும் நாங்கள் இந்தியாவுக்குள் நுழைய விசார வழங்கமாட்டோம். அனைவருக்கும் விசாவை ரத்து செய்துவிடுவோம்'' என எச்சரிக்கை செய்தார்.

மேலும், கனடாவில் உள்ள இந்தியதுணைத் தூதரைத் தொடர்பு  கொண்ட சுஷ்மா சுவராஜ் இது குறித்து அமேசான் நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உத்தரவு

அது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “ கனடாவில் இந்தியத் தூதர் இந்திய தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்ட விசயத்தை சாதாரணமாக எடுக்கக் கூடாது. இதை உயர்மட்ட அளவுக்கு கொண்டு சென்று அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

3 Attachments