பிக்ஸட் டெபாசிட்டில் 9.40 சதவீதம் வட்டி பெறுவது எப்படி? அதிக லாபம் தரும் ஸ்மார்ட் முதலீடு!

நீங்கள் அதிக லாபம் கொடுக்கும் ஒரு நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டம் கைகொடுக்கக்கூடும்.

Shriram Finance ups interest rates on Fixed Deposit Schemes sgb

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ ராம் ஃபைனான்ஸ் நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யும்போது 9.4 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பிக்ஸட் டெபாசிட் வட்டியை 0.05 சதவீதத்தில் இருந்து 0.20 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.

நிலையான வைப்புநிதி திட்டத்தில் அதிக வட்டியைப் எதிர்பார்க்கும் நபர்கள் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். ஸ்ரீராம் ஃபைனான்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால் இந்த முதலீடுக்கு பாதுகாப்பும் இருக்கும்.

Shriram Finance ups interest rates on Fixed Deposit Schemes sgb

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். பெண்களுக்கும் 0.10 சதவீதம் கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிலையான வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. அதற்கு மேல் ரூ.1,000 இன் மடங்குகளில் விருப்பான வைப்புத்தொகையைச் செலுத்த முடியும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் செய்யும் முதலீட்டில் வைப்புத்தொகைக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர வட்டிக்கான வாய்ப்பும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios